அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம பொதுமக்கள் சார்பாக நடத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் தை திருநாள் அன்று அவனியாபுரத்தில் தொடங்கி பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் வழக்கம் அந்த வகையில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான அவனியாபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் போட்டிகளை நடத்த தனிநபருக்கோ மாவட்ட நிர்வாகமோ நடத்தக்கூடாது.
அனைத்து ஜாதி அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாக போட்டியில் நடத்த வேண்டும் அதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அவனியாபுரம் கிராம பொதுமக்கள் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
– ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்