அங்குசம் சேனலில் இணைய

ஹீரோவா காட்டி 14 வயது பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஜல்சா ஆசிரியர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). இவர் லால்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே போல் பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (55). விவசாயி. இந்த நிலையில் ஆசிரியர் சதீஷ், சந்திரசேகர் ஆகியோர் 14 வயது மாணவி ஒருவரிடம் கடந்த 4 மாதங்களாக நெருங்கி பழகி வந்தனர்.

ஹீரோவா காட்டி 14 வயது பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஜல்சா ஆசிரியர் !
ஹீரோவா காட்டி 14 வயது பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஜல்சா ஆசிரியர் !

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாணவி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டார். 3 மாத கர்ப்பம் இதனையடுத்து மாணவியின் குடும்பத்தினர் அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள், மாணவியை பரிசோதனை செய்ததில் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை கேட்ட மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்த போது, சந்திரசேகர் மற்றும் ஆசிரியர் சதீஷ் ஆகியோர் தன்னிடம் நெருங்கி பழகி வந்த தகவலை தெரிவித்தார். மேலும் அவர்கள் இருவரும் ஆசைவார்த்தைகள் கூறி மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கைது இது குறித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி (பொறுப்பு) விசாரணை நடத்தி சந்திரசேகர், சதீஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.

இந்த ஸ்ரீரங்கம் ஆசிரியர் சதீஷ்  குறித்து நாம் விசாரிக்கையில்…

ஹீரோவா காட்டி 14 வயது பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஜல்சா ஆசிரியர் !
ஹீரோவா காட்டி 14 வயது பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஜல்சா ஆசிரியர் !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஆசிரியர் சதிஷ் தான் வேலைபார்க்கும் அரசு பள்ளியில் படிக்கும், ஏழை குழந்தைகளுக்கு வாட்ச்ஆப், முகநூல் மூலம் உதவி செய்வதாக நிதி திரட்டுவதற்காக தன்னுடைய சமூகவலைதள கணக்குள் அனைத்திலும்  தினமும் தொடர்ச்சியாக விளம்பரங்கள், பத்திரிகைகளில் ,வெளி வந்த செய்திகள், என்று அவர் புகழ்பரப்பும் வாசகங்கள்,  வழிந்து ஓடுகிறது, வெளிநாட்டு நிதி உதவி செய்தவர்கள் தான் அதிகம்,  அரசு பள்ளி ஆசிரியரான இவர், எந்த அடிப்படையில் முகநூல் வழியே நிதி வசூல் செய்கிறார்,  யார் அனுமதி கொடுத்தது என்பது பெரிய கேள்வியாக உள்ளது. 

இதில் உச்சக்கட்டமாக  ரீலிஸ் பாடல் ஒன்றில், காதல்மன்னன், என்ற சினிமா பாடலில், அவருடைய பல்வேறு புகைக்படங்களை வைத்து ரீல்ஸ் பதிவேற்றம் செய்து உள்ளார்.

முகநூலில் ரீல்ஸ் – ஆசிரியர் சதீஷ் லிங்

https://www.facebook.com/reel/206905898172731

ஸ்ரீரங்கம் பகுதியில் வீடு இருந்தாலும்,  பள்ளி அருகில் உள்ள சந்திரசேகரன் என்பவரின் வீட்டை தான் இவர் தன்னுடைய தனிமை போக்கும் இடமாக பயன்படுத்தியுள்ளார், பாதிப்பட்ட 14 வயது குழந்தை குறித்த உடல்நிலைகுறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த பெண் குழந்தையிடம் யார் காரணம் கடுமையான முயற்சிக்கு பின்னரே. அந்த பெண் குழந்தை சொல்லியுள்ளது, ஆரம்பத்தில் தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை மறுத்த ஆசிரியர் சதிஷ், வசமாக சிக்கிக்கொண்டோம் என்பதை தெரிந்தவுடன், ஒத்துக்கொண்டு உள்ளார்.

தன்னை சமூகத்தில் பெரிய ஹீரோவாக கட்டிக்கொள்ள பள்ளியில் படிக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று, நிதிதிட்டி புதிதாக அவன் கட்டிக்கொடுத்த கழிப்பறையிலே வைத்தே பலமுறை பள்ளி மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

கைதான ஆசிரியர் சதிஷின் உறவினர்களோ, ஆசிரியர் சதிஷ் மாற்று சாதியில் திருமணம் செய்தவர், இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள், அவருடைய சமூக சேவையை கண்டு பள்ளியில் காழ்புணர்ச்சியில் ஒரு  இப்படி பழி போடுகிறார்கள், என்கிறார்கள்.

இயக்குநர் பிரபு சாலமன், சமீபத்திய செம்பி திரைப்படத்தில் 10 வயது பெண்குழந்தையில் 3 இளைஞர்கள், மதுபோதையில் சீரழித்து போக்சோ, வழக்கு மூலம் தண்டிக்கப்படுவது போல் காட்டியிருப்பார், அதை கொடுமையாக உள்ளது, பள்ளி ஆசிரியர், சமூக ஆர்வலர், சமூக சேகவர் என்கிற போர்வையில் சதிஷ் பெரிய கொடூரத்தையே பள்ளிமாணவி மீது, பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.