பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் எஸ்.பி  – ஆள் கடத்தலுக்கு துணை போன எஸ்.பி  – பெரியார் சிலையை தூக்கிய எஸ்.பி – இது தான் திராவிட மாடல் ஆட்சியா? 

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தமிழகத்தில்  காவல்துறையில் அதிகாரிகள் சேட்டைகள் அதிகரித்துள்ளது. கடிவாளம் போட வேண்டிய முதல்வர் ஸ்டாலின் கண்டும் காணாமல் போகும் நிகழ்வால் இது யார் ஆட்சி என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சம்பவம் 1

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தென்காசியில் இளம் ஜோடி பிரிப்பு விவகாரத்தில் தென்காசி எஸ்.பி கடத்தல் கும்பலுக்கு உதவியதால் சார்ஜ்

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

சம்பவம் 2 

3

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ்  பாஜாக பிரமுகர் எச் ராஜாவிற்காக பெரியார் சிலையை அகற்றினார்

சம்பவம் 3. 

4

எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கேட்டு போராடிய இளைஞர்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர்.

சரோஜ் குமார் தாகூர். எஸ்.பி.
இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த சரோஜ் குமார் தாகூர். எஸ்.பி.   ‘சும்மா ஆக்டிங் செய்தோம்’ என விளக்கம்!

விரிவாக இது குறித்து பேசிய காவல்துறை ஐ.ஜி. ஒருவர் ” தமிழகத்தில் சமீபத்தில் இந்த ஆட்சிக்கு எதிராக சில அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு மேற்கண்ட சம்பவங்களை சொல்லமாம் .

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மரம் அறுவை ஆலை நடத்தி  வரும் குஜராத்தைச் சேர்ந்த நவீன் பட்டேலின் மகள் கிருத்திகா பட்டேல், உள்ளூரைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்ற இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மகள் காணாமல் போனதாக நவீன் பட்டேல் கொடுத்த புகாரை விசாரித்த குற்றாலம் போலீஸார், மணமக்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்திருந்தனர். விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு கடந்த 27-ம் தேதி இருவரும் வந்தனர். அப்போது கிருத்திகா தன்னுடைய கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவருடன் அனுப்பிவைத்தனர். வழியிலேயே காரில் வந்த நவீன் பட்டேல் மற்றும் அவரது குடும்பத்தினர், மணப்பெண் கிருத்திகாவைக் கடத்திச் சென்றனர்.

சாம்சன் - எஸ்.பி.
சாம்சன் – எஸ்.பி.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மணமகன் மாரியப்பன் வினித் கொடுத்த புகாரில் உடனடியாக வழக்கு பதியாமல் போலீஸார் இழுத்தடித்து மறுநாளே வழக்கு பதிவுசெய்தார்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. உடனே டி.ஜி.பி சைலேந்திரபாபு கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றதும் கடும் கோபமடைந்த அவர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், புகாரளிப்பவர்களிடமிருந்து உடனடியாகப் புகாரைப் பெற்று விசாரிக்க வேண்டும். ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களில் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், குற்றாலம் சம்பவத்தை நேரடியாகக் குறிப்பிடாமல் அந்த சம்பவம் பற்றியும் அதில் தெரிவித்திருந்தார்.

தேவக்கோட்டை பெரியார் சிலை அகற்றுதல்
தேவக்கோட்டை பெரியார் சிலை அகற்றுதல்

அதே போல சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் வீட்டின் மதில் சுவரில் வைக்கப்பட்ட பெரியார் சிலை சிவகங்கை மாடட்ட  காவல்துறையால் அகற்றப்பட்டது.எச் .ராஜாவின் பண்ணை வீட்டிற்கு அருகில் இருந்ததால் அவரது தூண்டுலின் பேரிலேயே அதிகாரிகள் பெரியார் சிலையை அதிகாரிகள் அகற்றியிருப்பதாக இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், தேவகோட்டை டி.எஸ்.பி. யாக இருந்த கணேஷ்குமார்  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்தவிவகாரத்தில் எஸ்.பி செல்வராஜ் தான் பாஜகவிற்கு வேலை செய்ததாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தது ஆனால் இவர்கள் மேல் எந்தவிதமான நடவடிக்கைகள் இல்லை.

சும்மா ஆக்டடிங் செய்தோம்.
சும்மா ஆக்டடிங் செய்தோம்.

அதே போல மாடுவிடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சூளகிரியில் நடந்த போராடத்தில்  கிருஷ்ண கிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் அங்குள்ள இளைஞர்களை லத்தியால் குத்தி பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சி பதறவைக்கிறது. இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் சீமானிடம் பேசி இதற்கு போராட்டம் நடத்த உள்ளனர்.  ஆனால் இந்த போராட்டத்தில் ஒரு சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல் எறிபடும் ஒரு காவலரை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சுற்றி வளைத்து காப்பாற்றி மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி விடும் காட்சி வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே சூழல் ஒரு மாதிரியாக உள்ள நிலையில் இப்படிப்பட்ட நபர்களை எல்லாம் மாவட்ட நிர்வாகத்தில் நியமனம் செய்தால் என்ன ஆகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது ” என்றார்.

சுரேஷ்குமார் எஸ்.பி
சுரேஷ்குமார் எஸ்.பி

இது குறித்து பேசிய உளவுத்துறையிலுள்ள  நேர்மையான அதிகாரிகள் சிலர் ”  சமீப காலமாக அதிமுக ஆட்சிக்கு நெருக்கமான நபர்களை காவல் துறையில் முக்கியமான பதவிகளில் நியமித்துள்ளனர். தேர்தல் நேரத்தில்  எடப்பாடி பழனிசாமிக்கு ஆல் இன் ஆளாக இருந்த சுரேஷ் குமார் என்பவரை திருவாரூர் எஸ்.பி. யாக நியமித்துள்ளனர். இந்த சுரேஷ்குமார் தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக தேர்தல் ஆனையத்தில் புகாரே இருந்தது. இது போல பலர் உள்ளனர். இவ்வளவு ஏன் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி  சங்கர் என்பவரே அதிமுக அதிகாரி என்கிற பலத்த பேச்சு உண்டு.

எப்படி அதிமுக ஆதரவாளர்கள் திமுக ஆட்சியில் கோலாச்சுகிறார்கள் என்றால் ஒரு வித்தியாசமான சூட்சமத்தை உளவுத்துறை தலைமை கையாள்கிறது. அது என்னவென்றால் அதிமுக ஆட்சியில் பவர்புல்லாக இருந்ததவர்கள் மீண்டும் பதவி கேட்டால் திமுக குடும்ப உறுப்பினரை பார்க்க சொல்கிறார்கள். அந்த சோர்ஸ் யார் என்பதை சொல்லி அவர்கள் மூலமாகவே ரெக்கமண்ட்ஸ் வாங்கி நியமனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆனால் எந்த ஆட்சியும் சாராத நடுநிலைமையான, நேர்மையான அதிகாரிகளை டம்மியான இடங்களில் போட்டு போலீஸ் சோர்ஸ்களை வீண்டிக்கிறது உளவுத்துறை தலைமை. முதல்வருக்கும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் இது தெரியாது.

இப்படி வந்தவர்கள்தான் புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ், தென்காசி எஸ்.பி சாம்சன் இன்னும் சிலர் உள்ளனர். இவர்கள் செய்த சம்பவம்தான் இப்போது காவல்துறையில் ஹாட் டாபிக்.

எஸ்.பி இந்த விவகாரத்தில் மிகவும் மோசமாகச் செயல்பட்டிருந்தார்” என டி.ஜி.பி சைலேந்திரபாபு
எஸ்.பி இந்த விவகாரத்தில் மிகவும் மோசமாகச் செயல்பட்டிருந்தார்” என டி.ஜி.பி சைலேந்திரபாபு

தென்காசி இளம் ஜோடி விவகாரத்தில் வட இந்திய  நபருக்கு ஆதரவாக  நேரடியாக  எஸ்.பி.சாம்சன் உதவியுள்ளார். அந்த விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டரே வட இந்திய பெண்ணின் தந்தையிடம் 20 க்கும் மேற்பட்ட லகரங்களை வாங்கியதாக ரிப்போர்ட் வந்தது அப்படி என்றால் எஸ்.பி.க்கு எவ்வளவு போனது என்று விசாரணை நடத்தினர் முடிவில் அதிர்ந்து போனது காவல்துறை மேலிடம். அதனால்தான் டி.ஜி.பி.சைலேந்திர பாபுவே சமீபத்தில் மணப்பெண் கடத்தப்பட்ட வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், அந்தக் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவுசெய்யாதது தவறானது. டி.எஸ்.பி-யிடம் கேட்டு வழக்கு பதிவுசெய்ய இருந்ததாக ஸ்டேஷன் அதிகாரி தெரிவிப்பதும், எஸ்.பி-யிடம் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக டி.எஸ்.பி குறிப்பிடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த மாவட்டத்தின் எஸ்.பி இந்த விவகாரத்தில் மிகவும் மோசமாகச் செயல்பட்டிருந்தார்” என டி.ஜி.பி சைலேந்திரபாபு காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதோடு இல்லாமல் சாம்சனுக்கு சார்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.   சாம்சனுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்க கோப்பு சென்ற போது அவருக்கு விஜிலென்ஸ் புகார் இருந்ததால் அந்த கோப்பை ரிஜக்ட் செய்தனர் இதெல்லாம் கடந்த கால சம்பவம்.

செல்வராஜ் எஸ்.பி.
செல்வராஜ் எஸ்.பி.

அதே போலத்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரைக்குடியில் பெரியார் சிலை விவகாரத்தில் தவறான முடிவை எடுத்தனர். இந்த முடிவு என்பது தவறானது.  இதற்கு காரணம் அந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் தான் இவர் மீது இல்லாத குற்றசாட்டுகளே இல்லை. கடந்த ஆட்சியில் புதுக்கோட்டையில் எஸ்.பி.யாக இருந்தார். அவர் அங்கு மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் முகமாகவே இருந்தார். சட்டம் – ஒழுங்கு என்றால் என்னவென்றே தெரியாது இவருக்கு.

பெரியார் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு பெரியார் சிலையை அதுவும் தனியார் பட்டா நிலத்தில் வைத்துள்ள சிலையை அகற்றினார்கள் என்றால் அவருக்கு போலீசுக்கான செய்பாடுகள் என்பதே சுத்தமாக இல்லை ஆனால் இப்படிப்பட்டவர்களைத்தான் எஸ்.பி.யாக நியமித்துள்ளனர்.

தற்போது முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நேரடியாகவே சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் செயல்பாடுகளை தெரிந்து கொண்டதோடு உடனே டிரான்ஸ்பர் செய்துள்ளனர். இப்படித்தான் உள்ளது திமுகவின் ஆட்சி. அதிகாரிகள் நியமனத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் ஆட்சிக்கு ஆபத்து ” என்றனர்.

– அஜித்குமார் 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.