புத்தகத் திருவிழா யாருக்கு லாபம்? இது பட்டுக்கோட்டையாரின் கணக்குங்க…

0

புத்தகத் திருவிழா யாருக்கு லாபம்? இது பட்டுக்கோட்டையாரின் கணக்குங்க…

17 நாள்கள் நடந்த புத்தகத் திருவிழாவுக்கு வந்த வாசகர்கள் 15 லட்சம், விற்ற புத்தகங்களின் மதிப்பு 16 கோடி! கால்குலேட்டர்தான் இருக்கிறதே என்று சும்மா ஒரு கணக்கு போட்டேன். மொத்த ஸ்டால்கள் 980. ஆகவே ஒரு ஸ்டாலில் மொத்த விற்பனை: 1,64,265/-& ஒரு நாள் விற்பனை: 9,603/-

இரண்டு வரிசைகளிலும் வாசல் வைத்த 4 ஸ்டால்கள் கொண்ட, அதேப் போல வேறு வேறு பெயர்களில் (ஒரே பதிப்பகத்தின் கிளைப் பதிப்பகங்கள் )பல ஸ்டால்கள் அமைக்கும் மெகா பதிப்பாளர்கள்தான் பதிப்புலகின் சூப்பர்ஸ்டார்கள். அவர்கள் நீங்கலாக ஒரே ஒரு ஸ்டால் கிடைத்த அல்லது அமைத்த பதிப்பகங்களே அதிகம். ஒரு நாள் விற்பனையான 9,603/&- தொகையில் புத்தகத்தின் அடக்க விலை + ஊழியர்கள் சம்பளம் + அமைப்புக்குச் செலுத்த வேண்டிய ஸ்டால் வாடகை + விளம்பரச் செலவு எல்லாம் போக..25 சதவிகிதம் லாபம் கிடைக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் ஒரு நாள் லாபம் ரூ.2,401/& மட்டுமே வருகிறது. ஒரு எளிய பதிப்பாளருக்கு இது கட்டுப்படியாகிற லாபம்தானா? அல்லது என் ஸ்டாலும் அங்கே இருக்கிறது என்கிற விளம்பரப் பதிவுதான் நிஜமான நோக்கமா? இந்தக் கணக்குகள் எல்லாமே 16 கோடிக்கும் புத்தகங்கள் மட்டுமே விற்பனை ஆயின என்கிற கோணத்தில்தான். ஆனால் உள்ளே விளையாட்டு சாமான்கள் உள்பட பலவும் விற்கப்படுகின்றன என்கிற துல்லியக் கணக்கிற்குப் போக வேண்டாம்.

அடுத்து.. 15 லட்சம் பேர் வருகை என்றால் நுழைவுச் சீட்டு ரூ10/&- அடிப்படையில் பபாசிக்கு வருமானம் ரூ.1.5 கோடி. விளம்பர பேனர்கள் மூலம் ஒரு வருமானம் உண்டு. பார்க்கிங், உணவு ஸ்டால்கள் ஒப்பந்தங்கள் மூலமும் கூடுதல் வருமானம் உண்டு. ஆக.. தனி பதிப்பகங்களை விடவும் அதிக லாபம் என்பது பபாசி அமைப்புக்குத்தான்.

அந்த லாபத்தில் ஒரு பகுதியை சிங்கிள் ஸ்டால் எளிய பதிப்பாளர்களுக்கு ஊக்கத் தொகையாகப் பிரித்துக் கொடுத்தால் அவர்கள் உற்சாகமடைவார்கள். சிங்கிள் ஸ்டால் எளிய பதிப்பாளர்கள் சிலரின் வேதனைப் புலம்பலைத்தான் நான் இந்தப் பதிவில் சொல்ல விரும்பினேன்.

17 புத்தகத் திருவிழா நடந்த நாட்கள் எண்ணிக்கை
15 லட்சம் வாசகர்கள் பங்குபெற்றனர்
16 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனை
980 & மொத்த கடைகள்
1,64,265 ரூபாய் & ஒரு கடையின் மொத்த விற்பனை
9,603 ரூபாய் & ஒரு கடையின் ஒரு நாள் விற்பனை
2,401 ரூபாய் & ஒரு கடையின் ஒரு நாள் லாபம்
1.5 கோடி ரூபாய் & நுழைவுச்சீட்டின் மூலம் லாபம்

இன்னொரு கணக்கு: 15 லட்சம் வாசகர்களும் புத்தகம் மட்டுமே வாங்கியதாக எடுத்துகொண்டு 16 கோடியை வகுத்துப் பார்த்தால் சராசரியாக ஒரு வாசகர் ரூ106/&- க்கு புத்தகம் வாங்கியிருக்கிறார்.

இது போதுமா? புத்தகம் வாங்க ஒதுக்கும் தொகையை வாசகர்களும் கூட்டலாம் என்றும் தோன்றுகிறது.

பட்டுக்கோட்டை பிரபாகரன்
பட்டுக்கோட்டை பிரபாகரன்

– பட்டுக்கோட்டை பிரபாகரன்

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.