அல்லேலூயா… ஜெய் ஸ்ரீராம்…. சாதித்தது என்ன…
அல்லேலூயா… ஜெய் ஸ்ரீராம்…. சாதித்தது என்ன…
“அல்லேலூயா” கோஷமிட்ட இத்தாலியை சேர்ந்த ராபர்ட். டி .நொபிலி என்பவர் தான் தமிழில் உரைநடையை உருவாக்க விதையாக இருந்தவர்.
“அல்லேலூயா” கோஷமிட்ட கான்ஸ்டைன்டின் ஜோசப் பெஸ்கிதான் தேம்பாவணியை தமிழிலக்கியத்துக்கு கொடுத்தவர்.
“அல்லேலூயா” கோஷமிட்ட ஜெர்மன் நாட்டை சேர்ந்த சீகன் பாலுக்கு ஐயர் தான் அச்சுக்கூடத்தை இந்த தமிழ் சமூகத்திற்கு உருவாக்கிக் கொடுத்தவர்.
“அல்லேலூயா” கோஷமிட்ட ஐரோப்பியரான பீட்டர் பெர்சிவல் என்பவரால் தான் தமிழுக்கு வார இதழ் என்கிற வடிவம் கிடைத்தது.
“அல்லேலூயா” கோஷமிட்ட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் கால்டுவெல் தான் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்கிற நூலை கொடுத்தார்.
“அல்லேலூயா” கோஷமிட்ட ஸ்கட்டர் சகோதரர்கள் உருவாக்கிக் கொடுத்தது தான் வேலூர் சிஎம்சி கல்லூரி.
“அல்லேலூயா” கோஷமிட்ட இக்னேசியஸ் லயோலா என்கின்ற குழுவினரால் தான் தமிழ்நாட்டிற்கு லயோலா கல்லூரி, தாம்பரத்தில் கிறிஸ்துவ கல்லூரி,\ நாகர்கோயிலில் ஸ்காட் கிறிஸ்து கல்லூரி, மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, திருச்சியில் புனித ஜோசப் கல்லூரி, பாளையங்கோட்டையில் புனித சேவியர் கல்லூரி, சென்னையில் கிறிஸ்துவ கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் கிடைத்தன.
“அல்லேலூயா” கோஷமிட்ட ஐடா ஸ்கடர் என்கிற பெண்மணியால் தான் வேலூரில் ஆசியாவில் மிகப் பெரிய மருத்துவமனையான சிஎம்சி கிடைத்தது.
“அல்லேலூயா” கோஷமிட்டவர்கள் உருவாக்கி கொடுத்த கல்லூரிகளில் படித்ததால் தான், பாஜகவிற்கு அத்வானி, அருண் ஜேட்லி, ஸ்மிருதி ராணி, ஜெபி நட்டா உள்ளிட்டோர் கிடைத்தார்கள்.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், 1964ம் ஆண்டு கொல்கத்தா கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தது. 70 ஆயிரம் முஸ்லிம்களை அகதிகளாக்கியது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், 1983 அசாம் மாநில நெல்லி சம்பவத்தில் 1800 முஸ்லிம்களை கொன்று குவித்தது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், 1989 ஆம் ஆண்டு குஜராத்தில் விசுவ இந்து பரிசத் நடத்திய ஊர்வலத்தில் ஆயிரம் பேர் கொல்லப்பட காரணமாக இருந்தது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், 1987ம் ஆண்டு உத்திரபிரதேசம் மீரட்டில் நடந்த சம்பவத்தில் 42 முஸ்லிம் இளைஞர்கள் உயிர் குடித்தது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், 1989 பீஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், 1992ம் ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பு கலவரத்தில் போலீஸ் சுட்டதில் 900 பேர் ரத்த வெள்ளத்தில் மிதக்க காரணமாக இருந்தது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், 2002 ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தில் 2000 முஸ்லிம்களின் உயிர் குடித்தது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், 2013 ஆம் ஆண்டு நடந்த முசாபர் நகர் கலவரத்தில் 42 முஸ்லிம்கள் மற்றும் 20 இந்துக்களின் ரத்தம் குடித்தது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான் 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடிய 53 இஸ்லாமியர்களை கொல்ல காரணமாக இருந்தது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், பாபர் மசூதியை தரைமட்டமாக்கியது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், உத்தரப் பிரதேசத்தில் காசியாபாத் மாவட்ட வயதான முஸ்லிமை காவி கும்பல்கள் தாக்க காரணமாக இருந்தது.
ஜெய்ஸ்ரீராம் என்கிற மதவாதம் தான், உத்திரபிரதேசம் கான்பூர் அருகே 16 வயது சிறுவனை காவிக் தொண்டர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்த காரணமாக இருந்தது.
–இனிகோ இருதயராஜ்,
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.
தமிழ்நாடு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்