மாநில சுமை தூக்குவோர் சங்க கொடி ஏற்று விழா மற்றும் பலகை திறப்பு விழா…!
முசிறியில் மாநில சுமை தூக்குவோர் சங்க கொடி ஏற்று விழா மற்றும் பலகை திறப்பு விழா.
முசிறி சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கி அருகில் மாநில சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றி சங்கப் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட செயலாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளருமான சதீஷ்குமார் தலைமையிலான நிகழ்ச்சியில் ,தென் மாவட்டங்களின் செயலாளரான மதுரை முனியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து சங்க பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மாநிலத் துணைச் செயலாளர் தெய்வேந்திரன், மாநில இணைச்செயலாளர் ரவி , மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், மற்றும் முசிறி கிட்டங்கி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பணி நிரந்தரம், அடிப்படைச் சம்பளம், பணி பாதுகாப்பு ,சங்க தேர்தலை உடனடியாக நடத்துவது போன்ற தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.