ஆட்சி வேட்டிக்குள் புகுந்த அவுட்சோர்ஸ் ஓணான்கள் !

0

கலைஞருக்கு நினைவுச் சின்னமாக, மெரீனா அருகே கடலில் பேனா வைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, பேனா வச்சா உடைச்சிடுவேன்னு பேசிய வீடியோ வைரலானது.

கூட்டம் நடந்த இடம் சென்னை கலைவாணர் அரங்கம். ஒரு காலத்தில் அது, தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ஏரியாவுக்குள்ளே வரும். அந்த ஏக்கம் தி.மு.க தொண்டர்களுக்கு இப்போது ஏற்பட்டது. “இந்நேரம் அன்பு அண்ணன் இருந்திருந்தா.. பேசுன வாய், தானா அடங்கியிருக்கும்” என்று சமூக வலைத்தளங்களில் ஆதங்கத்தைக் கொட்டினார்கள். சீமான் பேச்சுக்கு செமத்தியான பதிலடி கொடுத்து பல பதிவுகளும், வீடியோக்களும் வெளியாகின.

2 dhanalakshmi joseph
கலைஞர் பேனா - சீமான் பேச்சு
கலைஞர் பேனா – சீமான் பேச்சு

கலைஞரோட பேனா என்னென்ன சாதித்தது என்று தி.மு.க ஆதரவாளர்கள் பலரும் விளக்கினார்கள். கலைவாணர் அரங்கம் உள்ள பகுதிக்கு தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் அமைச்சர் சேகர்பாபு, “அவருக்கு மட்டும்தான் கை இருக்குதா? எங்களுக்கு கை இல்லையா, எங்க கைகள் பூ பறிக்குமா?” என்று மீடியாக்களிடம் ஓப்பனாக சொன்னதுடன், “அவனுக்கு இந்தப் பதில் போதும்” என்றும் சொன்னார். ஆனாலும், அந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமானை அப்படி பேசவே விட்டிருக்கக்கூடாது என்பதுதான் பெரும்பாலான தி.மு.க.வினரின் மன வெளிப்பாடு.

- Advertisement -

- Advertisement -

J. anbazhagan DMK
J. anbazhagan DMK

கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பது பற்றி சீமானின் கருத்து அவ்வளவு முக்கியமா? அவர் என்ன மீனவரா? கடலோரவாசியா? அல்லது ஆமைக்கறி விரும்பி என்பதால் அழைக்கப்பட்டாரா? அதெல்லாம் இல்லை. ஆட்சியாளர்களிடம் செல்வாக்காக இருக்கும் ஒரு என்.ஜி.ஓ. குரூப் திட்டமிட்டு, தி.மு.க.வினரின் நெஞ்சில் வாழும் கலைஞருக்கு எதிராக செய்திருக்கும் வேலை இது.

இந்த முறை தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, தொலைநோக்குப் பார்வையுடன் சில திட்டங்களை முன்னெடுத்தது. அதில், ஒன்று சூழலியல். அதாவது, இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு. கடந்த முறை ஆட்சியின்போது, மீத்தேன் திட்டத்தில் சிக்கிக் கொண்டது போல சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற கவனமும் இதற்கொரு காரணம். அதற்காக, சூழலியல் வல்லுநர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டது தி.மு.க தலைமை.

அந்த சந்தடி சாக்கில், அறிவாலயத்தில் நுழைந்ததுதான் பூவுலகு நண்பர்கள் என்கிற என்.ஜி.ஓ. அமைப்பு. இந்த அமைப்புக்கு ஆனந்தவிகடன் நிறுவனம்தான் மீடியா ஸ்பான்சர். என்னதான் அண்ணா காலத்திலிருந்து, கலைஞர், மு.க.ஸ்டாலின் காலம் வரை தி.மு.க.வை விகடன் கழுவி ஊற்றினாலும், அதுதான் ‘ஸ்டாண்டர்டு பத்திரிகை’ எனத் தி.மு.க தலைமை நம்புவது வழக்கம். அதனால், ஆனந்தவிகடன் தந்த ஐ.எஸ்.ஐ. முத்திரையுடனும், தி.மு.க.வுக்கு வேண்டிய அதிகாரிகளின் பரிந்துரையுடனும் உள்ளே வந்தது பூவுலகு நண்பர்கள் கோஷ்டி.

சுந்தர்ராஜன்
சுந்தரராஜன்
4 bismi svs

தேர்தலுக்கு முன் திருச்சி சிறுகனூரில் நடந்த தி.மு.க மாநாட்டில், பூவுலகு நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் என்பவர் பேசினார். தி.மு.க ஆட்சி அமைந்ததும், நாங்க தான் சூழலியலுக்கே அத்தாரிட்டி என கோட்டைக்குள்ளும் நுழைந்துவிட்டது பூவுலகு நண்பர்கள் அமைப்பு. முதல்வரின் செயலாளர்களில் முதன்மையானவர், இந்த அமைப்பை எல்லா வகையிலும் முன்னிறுத்தி, parallel government நடத்தும் அளவுக்கு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். முதல்வர் தலைமையிலான சூழலியல் குழுவிலும் பூவுலகு நண்பர்கள் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு இடம்பிடித்துவிட்டது. அதனால், சூழலியல் சார்ந்த கருத்துக்கேட்பு முதல் எல்லாவற்றிலும் இவர்களுக்கே முதலிடம் (நல்ல லாபமும் உண்டு).

அரசு சார்பிலான குழு என்பது அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களில் உள்ள சாதக பாதகங்களை எடுத்துரைத்து ஆலோசனை வழங்குவதற்கானது. ஆனால், அரசாங்க காசில் மஞ்சள் குளித்தபடியே, அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுவதே பூவுலகு நண்பர்கள் என்கிற வணிக நோக்க என்.ஜி.ஓ. அமைப்பின் முழுநேர வேலையாகிவிட்டது. சர்வதேச அளவில் தமக்கு உள்ள தொடர்பின் மூலம் கிடைக்கும் பலாபலன்களைக் கணக்கிட்டு, உள்ளூர் மக்களை தி.மு.க அரசாங்கத்திற்கு எதிராகத் தூண்டி விடுவதே இதன் வேலையாக இருக்கிறது.

பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம்
பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம்

ஒரு திட்டத்தை ஏற்பதும் ஏற்காததும் அந்தப் பகுதி மக்களின் சொந்த விருப்பம் சார்ந்த முடிவு. பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்தின் அவசியத்தை தி.மு.க அமைச்சர்கள் அந்த இடத்திற்கே சென்று மக்களிடம் விளக்கிவிட்டு வருவார்கள். அடுத்ததாக, பூவுலகு நண்பர்கள் அமைப்பு அங்கே சென்று போராட்டத்தைத் தூண்டிவிடும்.

நன்றாக கவனித்துப் பார்த்தோம் என்றால், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து சீமானும் அவரது கட்சிக்காரர்களும் போராட்டம் நடத்தி மீடியாக்களின் கவனத்தைப் பெற்றிருப்பார்கள். இப்போது கலைஞருக்கு பேனா நினைவுச்சின்னம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் சீமான் பேசியது மீடியா மற்றும் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கும். இரண்டிலும் மே 17 இயக்கத்தின் பங்கேற்பும் அப்படித்தான். இதையெல்லாம் செய்ததும், அவர்களுக்கு content எடுத்துக் கொடுத்ததும், அரசாங்க காசில் (அதாவது, மக்கள் வரிப்பணத்தில்) தங்கள் நிறுவனத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் பூவுலகு நண்பர்கள் கூட்டம் தான்.

கலைஞர் -பேனா
கலைஞர் -பேனா

“பேனா..வேணா..” என்று ஆரம்பித்து வைத்து, கலைஞருக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த திட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது போன்ற சீனை உருவாக்கியவர்கள், முதல்வர் தலைமையிலான குழுவில் உள்ள பூவுலகு நண்பர்கள் தான். இப்படித்தான் பல துறைகளிலும் என்.ஜி.ஓ.க்கள் வெவ்வேறு முகங்களுடன் நுழைந்திருக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பிறகு பார்க்கலாம்.

ஆட்சி எனும் வேட்டிக்குள், அவுட்சோர்சிங் என்.ஜி.ஓ.க்களை விட்டுக் கொண்டால், சீமான், …மான் எல்லாம் குத்தத்தான் செய்யும் என்கிறார் கலைஞர் காலத்தில், உரிய தகுதிகளுடன் போடப்பட்ட போஸ்டிங்கிற்கு இன்றுவரை நன்றி-விசுவாசத்துடன் உழைக்கும் கோட்டை அலுவலர் ஒருவர்.

– சிறகு

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.