இரவில் மறியல் செய்த பருத்தி விவசாயிகள் – புறக்கணித்த தாசில்தார் – சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய டி.எஸ்.பி.

0

துறையூரில் சாலை மறியல் செய்த பருத்தி விவசாயிகளை புறக்கணித்த தாசில்தார். முசிறி டிஎஸ்பி சமாதானப் பேச்சுவார்த்தை.

திருச்சி மாவட்டம், துறையூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறும் .இதில் துறையூர் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 50 ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் பருத்தியை துறையூர் ஒழுங்கு விற்பனைக்கூடத்திற்கு ஏலத்திற்கு கொண்டு வருவர்.

2 dhanalakshmi joseph

கோவை, பெரம்பலூர்,கொங்கனாபுரம், கும்பகோணம், புஞ்சை புளியம்பட்டி, ஆத்தூர், உடுமலைப்பேட்டை பகுதி வியாபாரிகள் பருத்தி ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுப்பர். அதே போல் நேற்று (31-01-2023) பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதில் வழக்கத்திற்கும் மேலாக துறையூர் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை அதிகளவில் கொண்டு வந்து ஏலத்தில் வைத்தனர். ஏலம் தொடங்கியதும் , வியாபாரிகள் கூறிய விலை என கடந்த வாரத்தில் ஏலம் போன தொகையை விட குறைவான விலையில் வியாபாரிகள் ஏலம் கேட்பதாக அதிகாரிகள் விவசாயிகளிடத்தில் சொன்னதாக கூறப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டும், வியாபாரிகளுக்கு , அதிகாரிகள் துணை போவதாகக் கூறி திருச்சி – துறையூர் சாலையின் இருபுறமும் இரவு 7 மணி அளவில் நடுரோட்டில் அமர்ந்து பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் சுமார் 300 பேர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருடன் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சமாதானம் அடையாத விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

4 bismi svs

மேலும் உள்ளூர் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து , அவர்களின் பருத்திக்கு அதிக விலைக்கு வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு ஏலம் எடுப்பதற்கு, துறையூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் துணை போவதாகவும் , இதனால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், மறு ஏலத்திற்காக தங்களின் பருத்தி பஞ்சு மூட்டைகளை வைப்பதற்கு கூட இடமில்லாமல் , உள்ளூர் வியாபாரிகளே குடோன்களில் தங்கள் பருத்தி மூட்டைகளை வைத்து ஆக்ரமித்துள்ளனர் என்றும் , இதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் துறையூர் வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.தொடர்ந்து 3 மணி நேரமாக சாலை மறியல் நடைபெற்ற போதும் துறையூர் வட்டாட்சியர் புஷ்பராணி சம்பவ இடத்திற்கு வராததால் விவசாயிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர். மேலும் தாசில்தாரைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.

முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், பருத்தி ஏலம் மறுநாள் மீண்டும் நடைபெறும்.  அப்போது உரிய விலையை நிர்ணயம் செய்து தர அதிகாரிகள் முன்வருவர். இதில் விலை குறைவாக இருந்தால் அடுத்த வாரம் நடைபெறும் ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம் எனக் கூறினார்.

இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். முசிறியிலிருந்து டிஎஸ்பி துறையூர் வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களை சமாதானப்படுத்தி மறியலைக் கை விட வைத்தார்.

ஆனால் 3 மணி நேரமாக விவசாயிகள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்த தகவல் கிடைத்தும் துறையூர் தாசில்தார் விவசாயிகளை நேரில் பார்க்காமல் புறக்கணித்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதிகாரிகள் மக்களுக்கானவர்கள் தான் என்பதை  தாசில்தார் போன்ற அதிகாரிகள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ !

– ஜோஸ்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.