தமுமுக சார்பில் திருச்சி அரசு மருத்துமனைக்கு ரூ80,000 மதிப்புள்ள பொருட்கள் !
தமுமுக சார்பில் திருச்சி அரசு மருத்துமனைக்கு ரூ80,000 மதிப்புள்ள பொருட்கள் !
தமுமுக 29 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு இரண்டு சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சுமார் 80,000ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 02.09.2023 காலை 11.30 மணியளவில் மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும்,மமக பொது செயலாளர் அப்துல் சமது MLA, மாநில பொருளாளர் Er. ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நேரு அவர்களிடம் பொருட்களை ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம் ஷா மமக செயலாளர் இப்ராகிம் பொருளாளர் ஹீமாயூன் அப்துல் சமது, அசாருதீன் , அப்துல் ரஹ்மான் சபீர், நசிர், ரபீக், அணி நிர்வாகிகள் ஜுபைர் ரஜாக் பக்ருதீன் இசாக் மோத்தி சதாம் சார்லஸ் பகுதி நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள். மற்றும் மருத்துவமனை பணியாளர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.