திருச்சியில் பயங்கரம்.. போலீஸ் துணையுடன் சோலார் பிளான்ட் தொழிலதிபர் கடத்தல்!   

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் பயங்கரம்.. போலீஸ் துணையுடன் சோலார் பிளான்ட் தொழிலதிபர் கடத்தல்!   

திருச்சி சீனிவாசன் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவர் சோலார் பிளான்ட் தொழில் செய்துவருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தொழில் நிமித்தமாக சிறுகனூர் சென்றுவிட்டு திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டிற்கு வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த ரவி (எ) ரவீந்திரன், அவரது சகோதரர் மகேந்திரன் மற்றும்போலீஸ்காரர் என்று கூறி வந்தவர் உள்ளிட்ட 4 பேர், சுப்பிரமணியிடம் வந்து, ஜீயபுரம்டிஎஸ்பி., கூட்டி வரச் சொன்னார் என்று கூறி கத்தியை காட்டி மிரட்டி, காரில் கடத்தி சென்றனர்.

Sri Kumaran Mini HAll Trichy

சுப்பிரமணியனுக்கு காரில் தர்ம அடி கொடுத்ததோடு,ஜீயபுரம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்ற னர். அங்கு சென்ற பிறகுதான் சுப்பிரமணியனுக்கு டிஎஸ்பிஅழைத்து வர சொல்லவில்லை என்றும், ரவீந்திரன் மற்றும் மகேந்திரனின் ஏற்பாடுதான்இது என்றும் தெரியவந்தது. விசாரணை முடிந்தவுடன் சுப்ரமணியனை அனுப்பி வைத்தனர்.

Flats in Trichy for Sale

ரவீந்திரன்
ரவீந்திரன்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது பற்றி சுப்ரமணியன் கூறுகையில், எனது நண்பர் மணிஎன்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மணி என்பவ ருக்கு தொழில் ரீதியாக நான்சாட்சி கையெழுத்து போட்டேன் என்பதற்காக என்னை காரில் கடத்தி, அடித்து, உதைத்து மணிக்கு எதிராக என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டார்கள். பிறகு என்னை எங்கு கடத்தினார்களோ அந்தஇடத்திலேயே இறக்கிவிட்டு செல்கையில், சொன்னபடி நடக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துவிட்டும் சென்றனர். பிறகு இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் இன்றளவு எடுக்கப்படவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்றார்.  போலீசில் பணி புரிந்தாலும், உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி ஆள் கடத்திய சம்பவம் தவறான செயல்தான். இதுபோன்று தவறான செயலில் ஈடுபடும் ஆட்களை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

– பிரபு பத்மநாபன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.