தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை மதுரையில் நிறைவு நாள்…..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்மொழி தொடர்பாக அரசு இயற்றுகின்ற சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குதொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை. தமிழ்மொழியை காக்க இன்னொரு மொழிப்போர் நடத்த வேண்டியுள்ளது.

வணிக நிறுவனங்களில் கலப்புமொழியில் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கையில் கருப்புமை வாளியுடன் போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெறும்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தமிழை தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தின் 8ஆம் நாள் நிறைவுநாள் விழா மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று பேசியபோது தமிழைதேடி மதுரை மாநகருக்கு வந்துள்ளேன், தமிழை தேடி வந்துள்ள நான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்தேன் ஆனால் இங்கு தமிழையும, தமிழன்னையையும் காணவில்லை. தமிழை தேடி என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது.

ஆனால் வேறு வழியின்றி இந்த பரப்புரை பயணத்தை மேற்கொண்டுள்ளோம், தமிழ் இந்த நகரத்திலே சிற்றூரிலே தமிழ் புலவர்கள் வீட்டிலே கூடே இல்லை அன்னை தமிழை காக்க இன்னொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும் எனவும் தொன்மை வரலாறு கொண்ட மதுரை தமிழ்மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது 2 காரணங்களால் தமிழ்மொழி அழிகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஆங்கில மோகம், தமிழை ஆங்கில மொழிக்கலவையுடன் பேசுவது, மொழி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்காமல் இருப்பது தான் எனவும், கலப்புமொழியோடு தமிழ்மொழியை பேசுவது பார்த்து கோபம் வரவில்லை ஆனால் பரிதாபம் தான் ஏற்படுகிறது.

Awareness campaign in search of Tamil completes day in Madurai.....
Awareness campaign in search of Tamil completes day in Madurai…..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆங்கிலயேர்களால்அடிமைபடுத்தபட்ட நாட்களை தவிர மற்ற நாடுகளில் தாய்மொழியில் பேசுகின்றனர் ,தமிழகத்தில் மட்டும்தான் தமிழ்மொழி அழிக்கப்படுகிறது, தாய்மொழியை கற்றுவிட்டு பின்னர் ஆங்கிலமொழியை கற்கலாம் தாய் மொழி தவிர்த்து பிற மொழியில் பேசுபவர்கள் காந்தியடிகள் கூறியது போல பேடிகளாக தான் இருப்பார்கள்.

பிரதமர் மோடி கூட தனது சொந்த மாநிலத்தில் பேசும் தாய் மொழியிலயே பேசுகிறார், அன்னை தமிழை வளர்க்க வேண்டும் என்பதால் தமிழையே அரசியலாக்க வேண்டியுள்ளது, அன்னை தமிழை பாதுகாக்க இன்னொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும் தமிழ்மொழி தொடர்பாக அரசு போடுகின்ற இயற்றுகின்ற இயற்ற கூடிய சட்டங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலோ உச்சநீதிமன்றத்திலயோ யாராவது வழக்கு தொடர்ந்தாலோ தொடர்ந்திருந்தாலோ அதனை திரும்ப பெற வேண்டும் இனி வழக்கு தொடரக்கூடாது அவர்களை கடுமையாக எச்சரிக்கிறோம் .

வழக்கு தொடர்ந்தால் விளைவுகள் வேறு விதமாக இருக்கலாம் இளைஞர்கள் தயார்படுத்த வேண்டும், இதனை அச்சுறுத்துவதறகாக சொல்லவில்லை என்றார். மேலும் இதனை வணிக நோக்கத்திற்காக வழக்கு தொடர்கிறார்கள் பள்ளிகளை நடத்தி ஆங்கிலத்தை கற்பதை விட பொறிகடலை விற்கலாம் என்றார்.

முன்னதாக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழ்மொழியை பாதுகாக்க மொழி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் பள்ளி இறுதி வகுப்புவரை தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் தமிழ் கட்டாய பாடச்சட்டத்தை மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்பு வரை நீட்டிக்க வேண்டும், தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும், உலகப்பொது மறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் .

சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உயர்கல்வியில் 30% இடப்பங்கீடு வழங்க வேண்டும் மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்பாட மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும் பிறமொழி கலப்பின்றி உரையாட தமிழ் மக்கள் உறுதியேற்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

-ஷாகுல் 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.