என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு இல்லை ! – ஐ ஏ எஸ் அதிகாரி ஹரிகரன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு இல்லை ! -ஐ ஏ எஸ் அதிகாரி ஹரிகரன் விளக்கம்!

ஐ ஏ எஸ் அதிகாரியான ஹரிஹரன் என்பவர் வீட்டில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் வந்தது
இந்த நிலையில் தனக்கும் ரெய்டுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என ஐ ஏ எஸ் அதிகாரியான ஹரிகரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இது குறித்து நம்மிடம் விளக்கமாக பேசிய ஹரிகரன்” எனக்கும் அந்த ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை என்னுடைய வீடு கோயம்பேடுவில் உள்ள ஐ ஏ எஸ் , ஐ .பி .எஸ் அதிகாரிகள் வசிக்கும் தாய்சாவில் உள்ளது அங்கு மத்திய அரசின் பெட்ரோலியத்துறையில் பணி புரியும் உயர் அதிகாரியான ஒரிசாவை சேர்ந்த மண்டேல் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அவருடைய வீட்டில் தான் ரெய்டு நடந்துள்ளது என்ன காரணம் என்று தெரியவில்லை ஆனால் என்னுடைய வீடு என்பதால் தொடர்ச்சியாக என்னுடைய பெயரை தவறாக பரப்பி வருகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நான் தற்போது மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இயக்குனராக உள்ளேன் எனக்கும் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை ” என்றார்.

இந்த ரெய்டு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பேசினோம்” ‘ மத்திய அரசின் பெட்ரோலிய துறை நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர் மண்டேல் ஒரசாவை சேர்ந்தவர் அவர் தான் சென்னை விமான நிலையத்தின் ஒட்டு மொத்த பெட்ரோலிய துறையின் தலைவராக உள்ளார் .

அவருடைய தொடர்பில் இருந்த சிலர் வெளி நாடுகளில் பணப்போக்குவரத்து செய்துள்ளனர். மிகப்பெரிய தொகை என்பதால் கடந்த 2 நாட்களாக ரெய்டு நடந்து வருகின்றது. ரெய்டு இன்னும் முடியவில்லை மிகப்பெரிய தலைகள் இதில் சிக்குவார்கள் விரைவில் எல்லாத் தகவல்களையும் வரும் ” என்றனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.