திருச்சி மாநகராட்சி வார்டு 46-ல் ரவுண்ட்அப்!

நம்ம கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு?

0

திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓர் ஆண்டு காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்டப்பணிகள் என்ன நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய ”அங்குசம் செய்திக்குழு” திட்டமிட்டது.

பொன்மலைப்பட்டி மலைஅடிவாரம், சகாயமாதா கோவில் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர் நகர், கொட்டப்பட்டு, கைலாஷ் நகர், காளியம்மன் கோவில் தெரு, அடைக்கலமாதா கோவில் 1, 2, 3 தெருக்கள், ராஜவீதி, சாந்திவீதி, நேரு தெரு, புதுத்தெரு, வஉசி தெரு, புதிய பாத்திமா தெரு உள்ளிட்ட பகுதிகளை கொண்டது 46வது வார்டு. இதன் கவுன்சிலர் கொட்டப்பட்டு கோ.ரமேஷிடம் அங்குசம் செய்தி குழு சந்தித்து ஓராண்டு சாதனை குறித்து கேட்டோம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

கொட்டப்பட்டு கோ.ரமேஷ் மாமன்ற உறு்ப்பினர்
கொட்டப்பட்டு கோ.ரமேஷ் மாமன்ற உறுப்பினர்

கட்சியில் வளர்ந்த கதை

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அப்போது அவர் கூறும்போது, கடந்த 1986-ல் முதன்முறையாக திமுகவிற்கு வாக்களித்தேன். எனது உறவினர்கள் பலர் திமுகவில் இருந்ததால் திமுகவின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து திமுகவின் வட்ட பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி ஆகிய பொறுப்புகளை ஏற்றேன். முதன்முறையாக 2001–&2006, 2006&2011 ஆகிய 2 முறை தொடர்ந்து பொன்மலை ரயில்வே காலனி குடியிருப்பு பகுதி கவுன்சிலராக பொறுப்பு வகித்தேன். அக்கால கட்டத்தில் மாநகராட்சி நிதிக்குழு தலைவராகவும் பதவி வகித்தேன். தற்போது 3வது முறையாக 46-வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பதவியேற்ற நாள் முதல் மனநிறைவுடன் மக்கள் பணி ஆற்றுவதாக உணர்கிறேன்.

ஓராண்டு வளர்ச்சி பணிகள்

  • கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெரு, கைலாஷ் நகர், மதுரை வீரன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பில் தார்சாலை, மலையடிவாரம் சகாயமாதா கோவில் தெருவில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் தார்சாலை, பாதாளசாக்கடை பணிகள் முடிவடைந்த பகுதிகளில் ரூ-1.16 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணிகள், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் தட்டுப்பாட்டை காவிரி கூட்டு குடிநீர் வழங்கியதின் மூலம் தீர்ந்து வைத்துள்ளேன்.
  • ரூ.9 இலட்சம் மதிப்பில் சாக்கடை மராமத்து பணிகள்,
  • ரூ.3 இலட்சம் மதிப்பில் சாலை பேட்ஜ் ஒர்க் பணிகள்,
  • வார்டு முழுமைக்குமான கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள மயானம் ரூ.7 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளேன். இதில்,மரக்கன்றுகள் நன்று ஒரு பசுமையான சூழ்நிலையை உருவாக்கி உள்ளேன்.
  • பல்வேறு வகையான மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளேன்.

 எதிர்கால திட்டங்கள்

  •  ரூ.49 இலட்சம் மதிப்பில் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவை மட்டுமல்லாமல்
  • துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான கோரிக்கை, புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான கோரிக்கை
  • கொட்டப்பட்டு பழைய ரேடியோ அறை பகுதியில் நூலகம் அமைத்தல் u பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளை தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தகுதிற்கேற்ப கழிவறை வசதிகளுடன் கூடிய ஷாப்பிங் மால் அமைப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநகராட்சியிடம் வைத்துள்ளேன்.
  •  விடுபட்ட பகுதிகளை பாதாள சாக்கடை பணியில் இணைப்பது u வார்டில் உள்ள 6 இடங்களில் செயல்படாமல் உள்ள வெங்டேஷ்வரா நகர், மொராய்ஸ் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் பூங்கா அமைக்க முயற்சிப்பது என்று தொடர்ந்து மக்கள் நலப்பணிகளை தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

15 கோடியில் புதிய திருமண மண்டபம்

  •  எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழமையான மாநகராட்சி திருமண மண்டபம் இடிக்கப்பட்டு சுமார் 15 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளேன்.

மாநகராட்சிக்கே முன்மாதிரி…
துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் மாநகரில் முதன்முறையாக மக்கும் குப்பைகளை கொண்டு காய்கறி தோட்டம் அமைத்துள்ளேன். இதை முறையாக விரிவுபடுத்தினால் மாநக ராட்சிக்கு ஒரு முன்மாதிரி முயற்சியாக அமையும்.

மனநிறைவு

1999-ல் சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அவரது தலைமையில் திருமணம் செய்தது, 2006ல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநில மாநாட்டு பேரணியில் முதல்வர் மு.கருணாநிதி அணிவகுத்த வாகனத்தை ஓட்டி சென்றது ஆகிய நிகழ்ச்சிகள் என்றும் மனநிறைவை தர கூடியதாக உள்ளது கறைபடியா கரங்களுக்கு சொந்தக்காரன் என்ற பெருமையே வரும் தேர்தலிலும் எனது வெற்றிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

மாநகராட்சி கமிஷனர் பாராட்டு

தினசரி காலை 2 மணிநேரம் சைக்கிளில் வார்டு முழுவதும் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அனைத்து வார்டு பகுதிகளிலும் நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிவதற்கு இருசக்கர வாகனத்தை விட சைக்கிளே சிறந்தது என இவர் தேர்ந்தெடுத்த வழிமுறையை மாநகராட்சி கமிஷனர் வெகுவாக பாராட்டி உள்ளார்.

– சந்திரமோகன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.