திருச்சி மாநகராட்சி வார்டு 43-ல் ரவுண்ட்அப்!

நம்ம கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு?

0

திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓர் ஆண்டு காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்டப்பணிகள் என்ன நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய “அங்குசம் செய்திக்குழு” திட்டமிட்டது.

கள நிலவரம்

2 dhanalakshmi joseph

இதன்படி பர்மா காலனி, நேதாஜி ரோடு, முருகன் கோவில் தெரு, மலையப்ப நகர், காவேரி நகர் ,திருவள்ளுவர் நகர் என 86 தெருக்களை கொண்டு சுமார் 19800 மக்கள் தொகை கொண்ட கொண்ட 43 வது வார்டு. இதன் கவுன்சிலராக உள்ளவர் வழக்கறிஞர் ந. செந்தில், மாநகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்களின் தேவைகள் என்ன,தொடரும் பணிக் காலத்தில் வார்டு மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பது குறித்து கவுன்சிலர் செந்திலிடம் பேசும்பொழுது, அவர் அங்குசம் செய்திக்குழுவினரிடம் தெரிவிக்கையில்,

வழக்கறிஞர் ந.செந்தில் மாமன்ற உறுப்பினர் மாநில இலக்கிய அணி புலவலர் (திமுக)
வழக்கறிஞர் ந.செந்தில் மாமன்ற உறுப்பினர் மாநில இலக்கிய அணி புலவலர் (திமுக)
- Advertisement -

- Advertisement -

வார்டு நலப்பணிகள்

  •  ஜோதிபுரம், குறிஞ்சி நகர், ராயல் கார்டன் எக்ஸ்டென்ஷன் பகுதி ஆகியவற்றில் 7 1/2 ஆண்டு காத்திருப்பதற்கு பின்பு காவேரி குடிநீரை கொண்டு வந்து சேர்த்தேன்.
  • காவேரி நகர் கரையோர முட்புதர்களை சுமார் 1 கிலோ மீட்டர் அடியோடு அகற்றியுள்ளேன்.
  • காவேரி நகர் 11 தெருக்கள், அம்பேத்கார் நகர், எம்ஜி ஆர் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 கோடி செலவில் தார்ச்சாலை அமைத்துள்ளேன்.
  • காட்டூர் மஞ்சத்திடல் பகுதியில் உள்ள மயானம் 45 ஆண்டுகளுக்கு பின்பு கார்ப்பரேஷன் பொது நிதியிலிருந்து 30 லட்சம் செலவில் மராமத்து பணிகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பெருமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  •  அனைத்து பகுதிகளிலும் புதிய தெருவிளக்குகள் மற்றும் 14 லைட் போஸ்ட்டுகள் நட்டு புதியதாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 99 சதவீதம் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
  • காவேரி நகர் நல மையம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.
  • கடந்த பட்ஜெட்டில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பர்மா காலனி, நேதாஜி நகர் தொடர்ச்சி, அண்ணா நகர், பூங்கா தெரு ஆகிய பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. பிலோமினாள்புரம் 1,2,3 தெருக்களில் ரூ.30 லட்சம் மதிப்பில் தார்சாலை, குறிஞ்சிநகர் பகுதி மற்றும் விஸ்தரிப்பு ஆகிய பகுதிகளில் தார்சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
  •  தெற்கு காட்டூர் பிள்ளையார் கோவில் தெரு அண்ணாநகர், போஸ்தெரு, ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் சிமெண்ட் சாலை ஆகிய பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து

  • தெற்கு காட்டூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை, மலையப்பன் நகரில் சத்துணவு கூடம்.

எம்.பி தொகுதி நிதியிலிருந்து…

  • எம்.பி . திருநாவுக்கரசர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பர்மா காலனி பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு ஆகிய பணிகள் நிறை வேற்றப்பட்டுள்ளன.
  •  வார்டுக்கு ஒதுக்கீடு செய் யப்பட்ட 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பணிகள், காவேரி நகர், காந்தி சாலை ,பர்மா காலனி ஆகிய பகுதிகளில் நூலகம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
  • குறிஞ்சி நகர் பெரிய சாக்கடைக்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

40 வருஷமாக போடாத தார்சாலை

  • 40 ஆண்டு காலம் போடப்படாத தார் சாலைகளை 30 லட்சம் மதிப் பீட்டில் செய்துள்ளேன்.
  • காட்டூர் அந்தோணியார் கோவில் முதியோர் இல்லத்தில் அவர்களுக்கான சுகாதார பணிகள் மருத்துவ உதவிகள்
  • வார்டு மக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் எவ்வித கட்டணமும் இல்லாமல் செய்து தருவது உள்ளிட்ட ஏராளமான பணிகளை செய்து வருகிறேன்.

எதிர்கால திட்டங்கள்

4 bismi svs
  •  வருங்காலத்தில் வார்டு மக்களின் இல்லத்தில் நடைபெறும் இன்ப, துன்ப நிகழ்ச்சிகளில் பயன்படக்கூடிய சாமியானா பந்தல், நாற்காலி ,பாத்திரங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்குவது
  • இறுதிச் சடங்கிற்கு பங்கேற்கும் சொர்க்க ரதம் இலவசமாக தருவது,
  • மக்களின் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தும் வகையில் ஆம்னி ரக வாகனங்கள் ஏற்பாடு செய்வது,
  • நலிந்த 100 முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாதம் ரூபாய் 150 (ரேஷனில் அனைத்து பொருட்களும் ஜீனி, எண்ணெய் ,கோதுமை உட்பட்டவை வாங்க 132 ரூபாய் தான் செலவாகிறது ) வழங்குவது,
  • ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார்டு பகுதிகளில் கஞ்சி,சத்து மாவு , பயிர் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

 

சமூகசேவை

  • இவர் காட்டூர் அந்தோணியார் கோவிலில் தங்கியிருக்கும் ஆதரவற்றோர் உயிரிழந்தால் சொந்த செலவில் அவர்களுக்கான இறுதிச்சடங்குகளை செய்து தருவது, ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொகை கட்டுவது மற்றும் தனது அரியவகை ஓ நெகடிவ் ரத்தத்தை இதுவரை 18 முறை தானமாக வழங்கியுள்ளார். இச்செயலுக்காக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

ஆன்மீகத்தில் நாட்டம்

நெடுங்காலமாக தெற்கு காட்டூர் மக்களின் கோரிக் கையாக இருந்த அரசரடி விநாயகர் கோவில் கும்பா பிஷேகம் செய்யும் பணி மற்றும் குறிஞ்சி நகரில் வரும் ஏப்ரல் 8 ,9 ,10 தேதிகளில் நடைபெறும் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா ஆகியவற்றை முன் நின்று நடத்துவது மட்டுமல்லாமல் பர்மா காலனி முருகன் கோவி லில் பாலாலய பணிகள் ,மலையப்ப நகர் கருப் பாயி குல முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி திருவரம்பூர் தொகுதி யை முன்மாதிரி தொகுதியாக மாற்ற பணியாற்றி வருகிறார். அவரையே எனது முன்மாதிரியாக கொண்டு அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் முன்மாதிரி வார்டாக எனது வார்டை மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.

  •  கவுன்சிலர் வழக்கறிஞர் ந.செந்தில் முதுகலை தமிழ் இலக்கியமும், நூலக தகவல் அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்று பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்றவர்.
  •  குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழாவில் வருகை தந்த போது நாட்டு நலப்பணி திட்ட மாணவர் தலைவராக (NSS Leader) திறம்பட பணியாற்றியதால் பாராட்டும் பட்டமும் பெற்றுள்ளார்.

  •  சட்டப்படிப்பு முடிந்து திறம்பட வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் 2011 வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேராசிரியர் ஆய்வக நூலகத்தில் உதவி நூலகராக பணியாற்றியுள்ளார். அப்பொழுது டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்த பொழுது திருமணத்தை அறிவாலயத்தில் தலைமை ஏற்று சொந்த செலவில் நடத்தி வைத்து சிறப்பித்துள்ளார்.

  •  நாடாளுமன்ற தேர்தல் நாயகன், நாடு போற்றும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம், ஓய்வின்றி மக்கள் பணியாற்றும் தலைவர் மு.க.ஸ்டாலின் என்பது உட்பட முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து 18 தலைப்புகளில் நூல்கள், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்த இரண்டு நூல்கள், கழக வரலாற்றில் கடமை வீரர் அன்பில் தர்மலிங்கம் ஒரு மறையா சகாப்தம் நூல் என 21 நூல்களை எழுதியுள்ளார்.
  •  எழுத்து வேந்தர், இளம் எழுத்துச் சிற்பி உள்ளிட்ட பல்வேறு வகையான இலக்கிய விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ள இலக்கியவாதி ஆவார்.
  • ஓராண்டு பதவி முடிவடைந்த பின் திருச்சி பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநகரின் 1வது சிறந்த கவுன்சிலர் என்ற விருதை பெற்றுள்ளார்.

– சந்திரமோகன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.