தேனியில் நீரூற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் பலி!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தேனி ரயில்வே நிலையம் அருகே உள்ள நீரூற்றில் நேற்று மாலை தேனியைச் சேர்ந்த சிவராஜா என்பவரது மகன் சிவசாந்தன்(12), ரமேஷ் மகன் வீர ராகவன் (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளனர். இருவரும் ஒரே பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் இருவரும் நேற்று இரவு வரை வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் நேற்றிரவு முதல் சுமார் 30அடி ஆழமுள்ள நீரூற்றில் தீயணைப்பு வீரர்கள் மாயமான சிறுவர்களை தேடி வந்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பல மணி நேர தேடுதலுக்கு பின் தற்போது சிறுவர்கள் இருவரும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ஜெ.ஜெ

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.