காலில் விழும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் இவ்வளவு தூரம் பரவ சன் டிவி, விஜய் டிவிக்களில் பாட்டு நடனப் போட்டிகள் நடத்திய பார்ப்ஸ் மற்றும் பார்ப்பனிய அடிமைத்தனம் ஊறிப்போன சினிமாக்காரர்களும் முக்கியக் காரணம்.
ஜெயலலிதா காலில் விழுந்த அமைச்சர்கள் விமர்சிக்கப்பட்ட அளவுக்கு உஷா உதுப், பாடகர் ஸ்ரீநிவாஸ், அனுராதா ஸ்ரீராம், கலா மாஸ்டர் இவர்கள் காலில் விழுந்து விழுந்து போட்டியாளர்கள் எழுந்தது கேள்விக்கு உள்ளாக்கப்படவே இல்லை.
யாராக இருந்தால் என்ன? எவ்வளவு பெரிய சாதனையாளராகவோ வயதில் மூத்தவராகவோ இருந்தால் என்ன? காலில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு எனும் அடிப்படைக் கருத்து கூட இங்கே பதிவாகவில்லை. ஷார் அம்மா என்று திரைக்கலைஞர்களுக்கு ஏகப்பட்ட மரியாதை முட்டுகள் வேறு !
காலா படத்தில் கை கொடுத்துப் பழகுங்க சார் என்று ஜரீனா நானா படேகருக்குச் சொல்லிய வசனத்தை ஏன் நிஜவாழ்வில் நடிகர்கள் சொல்வதில்லை? எல்லாம் புகழ் அதிகார போதை தான். அதற்கு ரத்தின கம்பளம் விரித்துக் கொடுத்துப் பின்நாளில் கூஜா தூக்கிப் பிழைக்கவென்றே பாடு படுகின்றன வெகுஜன ஊடகங்கள்.
அதுவும் நாடெங்கும் மாணவர் போராட்டம் வீறு கொண்டு பரவும் இக்காலகட்டத்தில் வரிசையாகப் பொத்துப் பொத்தென்று ஒரு திரைக் கலைஞன் காலில் மாணவர்கள் விழுவது காணச் சகிக்கவில்லை.
கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா மைக்கப் பிடிச்சி அடுத்து வரவங்க யாரும் கால்ல விழாதீங்கன்னு கடுமையா சொல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்? ஆசை இருப்பது மட்டுமல்ல, சுயமரியாதை துளியும் அற்றவர்களே சகமனிதர்களின் மாண்பைக் குலைக்கும் இச்செயலில் அகமகிழ்கிறார்கள்.
ச்சீச்சி பெரியார் மண்ணாம்! அவரையும் அவர் கருத்துகளையும் தாம் மண் போல மிதித்துக் கொண்டிருக்கிறோம்.
– தீபலெட்சுமி







Comments are closed, but trackbacks and pingbacks are open.