தாய்ப்பால் – வெறும் உணவு அல்ல ! அதையும் தாண்டி புனிதமானது !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் செவிலியர் கல்லூரி சார்பில், குழந்தைகள் நலத்துறை மற்றும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ செவிலியர் துறை ஆகிய துறைகளின் சார்பில் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

செவிலியர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் பி. பாரதி வரவேற்புரை நிகழ்த்த, திருச்சி SMCH மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர். ஆர்த்தி ஜி. மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். சத்தியபிரியா ஜெ. ஆகியோர் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் தாய்ப்பால் ஏற்படுத்தும் நன்மைகள், பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினர் வழங்க வேண்டிய ஆதரவு குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தெல்லாம் மருத்துவர் ஆர்த்தி சிறப்புரையாற்றினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

”தாய்ப்பால் வழங்குவதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், தாய் மற்றும் குழந்தைக்கு இடையேயான பாசப்பிணைப்பு வலுப்பெறும் என்பதை எடுத்துரைத்தார் செவிலியர் கல்லூரியின் பேராசிரியர் எஸ். ராஜேஷ்.

போஸ்டர் மற்றும் ரங்கோலி போட்டிகள், Role Play, Community Awareness நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் வழியே தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்போவதாக மாணவர்கள் உறுதியேற்றனர். நிறைவாக செவிலியர் கல்லூரி உதவிப் பேராசிரியர் திருமதி சூர்யா சுரேந்திரன் நன்றியுரை வழங்கினார்.

“தாய்ப்பால் – குழந்தையின் ஆரோக்கியமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான சிறந்த தொடக்கம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், தாய்ப்பால் வழங்குவதை ஊக்குவித்து, ஒவ்வொரு தாய்க்கும் தேவையான ஆதரவை வழங்குவதன் முக்கியத்துவத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.