அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 40% போலி மதுபானங்கள் விற்பனை!

0

அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 40% போலி மதுபானங்கள் விற்பனை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், பாஜக மகளிர் அணி சார்பில் கள்ளச் சாராயத்திற்கு எதிராகவும் மது ஒழிப்பிற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் , “கள்ளச் சாராயம் குடித்து 22 நபர்கள் உயிரிழந்த சம்பவம் இதுவே முதல் முறை. மதுவிலக்கு அமல்படுத்தியிருந்த காலகட்டத்தில் கூட இதுபோன்ற ஒரு உயிரிழப்பு ஏற்படவில்லை .

தமிழகத்தில் தற்போது சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரவிலும் கட்டுப்பட்டை மீறி மது விற்பனை நடைபெறுகிறது. மதுக் கடைகள் மூடிய பிறகும் விடிய விடிய மது விற்பனை நடைபெறுகிறது . மேலும் தமிழக முழுவதும் சந்துக்கடை என்று திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களை நடத்தி வருகிறார்கள் . அவர்களே மது விற்பனை செய்து வருகிறார்கள்.

அப்படி இருந்தும் எப்படி தமிழகத்தில் இவ்வளவு கள்ள சாராயம் பெருகி உள்ளது என்ற கேள்வி இன்று அனைவரும் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பதே போலி மது தான். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் மது பாட்டில்கள் போலியானவை.

வருமானத்தை குறைப்பதற்காக வரியை ஏய்ப்பதற்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் 40 சதவீதமான மது பாட்டில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வராமல் வெளிப்பகுதிகளில் இருந்து வருகிறது. அதனை பார்கள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு பெயர் தான் கரூர் கும்பல் என்று சொல்லி வருகிறது அரசாங்கமே போலி மதுவை கொடுக்கும் பொழுது நாம் ஏன் நல்ல சாராயத்தை குடிக்க கூடாது என்று தான் அவர்கள் இன்றைக்கு விலை குறைவான சாராயத்தை வாங்கி குடிப்பதற்கு தயாராகி விட்டார்கள்.

இந்த நிலை தொடரக்கூடாது. முற்றுப்புள்ளி உடனடியாக வைக்க வேண்டும் கள்ள சாராயத்தை மட்டும் தடுக்க கூடாது அரசு மதுபான கடைகளில் விற்கப்படும் போலி மதுவையும் தடுத்திட வேண்டும். சாராயத்தை மட்டுமே நம்பி நடத்தப்படும் இந்த அரசாங்கம் மிக விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும். மாநிலத்தின் உரிமை திராவிட மாடல் உரிமை இதுதான் திராவிட மாடல் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

அவர்கள் தான் அதிக அதிகாரம் படைத்தவர்கள் வானாகிய அதிகாரம் படைத்தவர்கள். இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்ற பொழுது மட்டும் மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்திற்கு அடாவடிக்கும் அராஜகத்திற்கும் ஊழலுக்கும் எப்படி நாங்கள் பங்கு பெற முடியும்.

இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் ஊழல் அரசாங்கம் சாராயத்தை திருடி தன்னுடைய குடும்பத்தை வளர்த்துக் கொள்கின்ற அரசாங்கம் சாராயத்தில் ஏழை எளிய மக்களை கொன்று விட்டு அதில் கிடைக்கும் 30 சதவீத கமிஷன் தொகையை வைத்து தன்னுடைய குடும்பத்தை நடத்தும் அரசு இந்த அரசு கேடுகெட்ட குடும்பமாக இருப்பது தான் இந்த அரசாங்கம்.

முதலமைச்சரின் குடும்பத்திற்கு இவ்வளவு பணமும் செல்கிறது என்றால், ஒரு கேடுகெட்ட இவர்கள் பிணத்திலிருந்து பணத்தை எடுத்து தின்றும் நபர்களுக்கும் இந்த முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது. சாராயத்தில் வரும் வருமானத்தை வைத்து வாழ்கின்ற குடும்பம் எத்தனை நாட்களுக்கு உருப்படி ஆகும்” என்று தெரிவித்தார்.

-சோழன் தேவ்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.