பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை:
தந்தைக்கு ஆயுள் தண்டனை!
போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
தான் பெற்ற மகளுக்கே தொடர்ந்து நான்காண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தைக்கு தஞ்சை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். வயது 49. இவரது மனைவி 2015ம் ஆண்டு இறந்து விட்டார்.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயதேயான தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் பார்த்திபன். அதற்கு அச் சிறுமி எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளார்.
அச் சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் இதுபற்றி சைல்டு லைன் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், அச்சிறுமியை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் மகளிர் காவல் நிலைய போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அச்சிறுமிக்கு பார்த்திபன் கடந்த 20015-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் அலகைச் சேர்ந்த சுகந்தவள்ளி அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழவழக்குப் பதிவு செய்து பார்த்திபனைக் கைது செய்தனர்.
பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தஞ்சையில் செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.
இவ் வழக்கு விசாரணை தஞ்சாவூரில் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், அச்சிறுமியின் தந்தை பார்த்திபனை குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
குற்றச்சாட்டுக்குள்ளான பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார். அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் 6 மாங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதிக்கப்பட்டோர்க்கான நிதியிலிருந்து ரூ.3,00,000 வழங்குமாறு அரசுக்கு பரிந்துரைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தஞ்சையில் அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்கிவரும் அச்சிறுமி தற்போது அரசு பெண்கள் கல்லூரியில் பட்டப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.