மகளிர் உரிமைத்தொகை : விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மகளிர் உரிமைத்தொகை :
விண்ணப்பங்கள் பதிவேற்றம்
செய்யும் பணியை
ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகேயுள்ள மனையேறிப்பட்டி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெறுவதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமையன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

திருச்சியில் நடைபெற்ற ‘வேளாண் சங்கமம் 2023’ மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தஞ்சை வரும் வழியில் பூதலூர் ஒன்றியம் மனையேறிப்பட்டி கிராமம் அருகே அவரது கார் வந்தபோது அப்குதியிலுள்ள கிராம சேவை மையத்தில் நடைபெறும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அப்போது விண்ணப்பங்களை பதிவு செய்ய வந்த பெண்களிடம் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், ‘விண்ணப்பங்களை பதிவு செய்வதில் சிரமங்கள் எதுவும் இருக்கிறதா? பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உங்கள் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கிறார்களா? எனக் கேட்டறிந்தார்.


இம் முகாமில் பணிபுரியும் பணியாளர்களிடம், ‘தினமும் எத்தமைன விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது?. பதிவு செய்யும்போது தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏதாவது ஏற்படுகிறதா?’ எனக் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், ‘ விண்ணப்பங்களை பதிவு செய்ய வரும் மகளிர் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டினை முறையாகப் பராமரிக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டும்’ என முகாமிலுள்ள அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), துரை.சந்திரசேகரன் (திருவையாறு), மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.