அங்குசம் பார்வையில் ‘லவ்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 அங்குசம் பார்வையில் ‘லவ்’

தயாரிப்பு: ‘ஆர்.பி.பிலிம்ஸ்’ ஆர்.பி.பாலா & கெளசல்யா பாலா. நடிகர்-நடிகைகள்: பரத், வாணிபோஜன், விவேக் பிரச்சன்னா, டேனியல், ஸ்வயம் சித்தா, ராதாரவி. தொழில்நுட்பக் கலைஞர்கள்: ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா, இசை: ரோனி ரஃபேல், எடிட்டிங்: அஜய் மனோஜ். பி.ஆர்.ஓ.: சதீஷ் ( எய்ம்)

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

சொந்தமாக தொழில் நடத்தி நஷ்டப்பட்டு கஷ்டத்தில் இருக்கும் பரத்தை, காபி ஷாப்பில் மாப்பிள்ளை பார்க்க வருகிறார் வாணி போஜன். கோல்டு காபி ஆர்டர் பண்ணுகிறார் வாணிபோஜன். பிளாக் டீ என்கிறார் பரத். ”எங்கப்பாவுக்கு உங்களைப் பிடிக்கல” என்கிறார் வாணி. கிளம்புகிறார் பரத். “எங்கப்பாவுக்குத் தான் பிடிக்கலேன்னு சொன்னேன், எனக்கு பிடிக்கலேன்னு சொல்லலியே” என ஸ்மைலிங்குடன் சொல்கிறார் வாணிபோஜன். அதற்கடுத்து, வரிகள் தெளிவாகக் கேட்கும், புரியும்படியான ஒரு இதமான லவ் சாங், பரத்துக்கும் வாணிபோஜனுக்கும் மேரேஜ்.

மகளுக்குத் திருமணப் பரிசாக காஸ்ட்லியான ஃபிளாட் ஒன்றைக் கொடுக்கிறார் வாணிபோஜனின் அப்பா. அந்த வீட்டுச் சாவியை வாங்கும் போதே, பரத்தின் செல்ஃப் ரெஸ்பெக்ட் எட்டிப் பார்க்கிறது, இருவருக்குமிடையே சின்னதாக வாக்குவாதம். பரத் கேட்டுக் கொண்டபடி ஒரு வருடம் கழித்து கர்ப்பமாகிறார் வாணி போஜன். மாமனாரின் பணத்தில் வேறொரு தொழில் ஆரம்பித்து, அதுவும் நஷ்டமானதால் குடிக்கு அடிமையாகிறார் பரத்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்புகிறார் வாணி போஜன். வீடு இருக்கும் நிலைமையும் பரத் இருக்கும் கண்டிஷனும் வாணி போஜனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. கணவனுக்கும் மனைவிக்குக்குமிடையே வாக்குவாதம் சூடேறுகிறது. போதை  ஆத்திரம் தலைக்கேறிய பரத், வாணியின் கழுத்தைப் பிடித்து மெகா சைஸ் கண்ணாடி பிரேமில் மோதுகிறார். வாணி போஜன்

இதெல்லாமே படம் ஆரம்பித்து கால் மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது. எண்ணிப் பார்த்தால் ஏழெட்டு சீன்கள் தான். இந்த ஏழெட்டு சீன்களை வைத்து, ஒரு மணி நேரம் ஐம்பத்து ஏழு நிமிடங்களுக்கு செம த்ரில்லிங்காக ‘லவ்’வை ஃபீல் பண்ண வைத்துள்ளார் டைரக்டர் ஆர்.பி.பாலா. ஆரம்பத்தில் நடக்கும் அந்த ஏழெட்டு சீன்கள், க்ளைமாக்சில் வரும் ஒரு சீன், இது மட்டுமே வெளிப்புறத்தில் நடக்கிறது. மற்ற எல்லாமே டிரிபிள் பெட்ரூம் உள்ள அந்த ஃபிளாட்டுக்குள் மட்டுமே கதை நடக்கிறது. ”என்னடா கொடுமை இது, அழகான வாணி போஜனை, படம் ஆரம்பிச்சு பத்தே நிமிஷத்துல சோலிய முடிச்சுட்டாய்ங்களே”ன்னு நாம நினைச்சுக்கிட்டிருக்கும் போது, இண்டர்வெல் விடுகிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இண்டர்வெலுக்குப் பிறகு தான் ஆர்.பி.பாலாவின் மேஜிக் ஆரம்பிக்கிறது. இண்டர்வெல் வரை பல மாடுலேஷன்களில் பரத்தின் பெர்ஃபாமென்ஸ் டாப் ரகம் என்றால், இண்டர்வெல்லுக்குப் பின் நான்கே நான்கு சீன்களில் வாணி போஜன், சூப்பர் பெர்ஃபாமென்ஸில் அசத்திவிட்டார். ஆர்.பி.பாலாவின்  இந்த மேஜிக்கிற்கு பக்கா சப்போர்ட்டாக இருக்கிறது கேமராமேன் பி.ஜி.முத்தையாவின் கண்கள் வித்தை. கதை நடக்கிறது ஒரே ஃபிளாட்டுக்குள்ள. அதனால நம்மையும் வித்தையும் காட்டுவோம்னு மனுஷன் சின்சியரா உழைச்சிருக்காரு.

எடிட்டர் அஜய் மனோஜின் ஃபினிஷிங் பிரேம்களும் ‘லவ்’வை ரொம்பவே ரசிக்க வைக்கிறது. அந்த வீட்டில் மாட்டியிருக்கும் மெகா சைஸ் ப்ளாக் & ஒயிட் கண்ணாடி பிரேமில் பரத்தும் வாணி போஜனும் இருக்கும் அந்த போட்டோ தான் ‘லவ்’விற்கு அழகான கவிதை சாட்சியாகவும் இருக்கு, ரத்த சாட்சியாகவும் இருக்கு. இதற்காகவே ஆர்ட் டைரக்டருக்கும் படத்தின் டைரக்டர் ஆர்.பி.பாலாவுக்கும் ஸ்பெஷல் சபாஷ். ஆரம்ப லவ் சாங்கிலிலும் சரி, பேக்ரவுண்ட் ஸ்கோரிலும் சரி, மியூசிக் டைரக்டர் ரோனி ரஃபேல் ஆச்சர்யப்பட வைத்துவிட்டார்.

பரத்திற்கு ‘ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி’ என்பதால், அதற்குள் வரும் பரத்தின் நண்பரான விவேக் பிரசன்னாவும் கள்ளக் காதல் ஜோடிகளான டேனியல்—ஸ்வயம் சித்தாவும் கதைக்குள் கச்சிதமாக கனெக்ட் ஆகியிருக்கிறார்கள். வாணி போஜனின் அப்பாவாக ஒரு சீனில் மட்டும் வருகிறார் ராதாரவி.

 

பேஸிக்கலி இது கள்ளக் காதல்-கொலையைச் சொன்ன இங்கிலீஷ் படம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, மலையாளத்தில் ரீமேக்காகி ஹிட்டடித்தது. அதைத் தான் நமக்கு ஷார்ப்பான வசனங்களுடனும் எதிர்பாராத க்ளைமாக்ஸுடனும்  ‘லவ்’வாக காண்பித்திருக்கிறார் ஆர்.பி.பாலா.

–மதுரைமாறன்   

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.