அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் “ஜெயிலர்”

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அங்குசம் பார்வையில் “ஜெயிலர்”

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர். டைரக்ஷன்: நெல்சன். நடிகர்-நடிகைகள்: விநாயகம். மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மிர்னாமேனன், மாஸ்டர் ரித்விக், யோகிபாபு, தமன்னா, சுனில், வி.டி.வி.கணேஷ், கிஷோர் ரெடின் கிங்ஸ்லி.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தொழில்நுட்பக் கலைஞர்கள்: இசை: அனிருத், ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன், எடிட்டிங்: ஆர்.நிர்மல், நடனம்: ஜானி, ஸ்டண்ட் டைரக்டர்: ஸ்டண் சிவா. மேக்கப்: ஹரிநாத், காஸ்ட்யூம் : பல்லவி சிங், முத்துல் ஹஃபீஸ். பி.ஆர்.ஓ.ரியாஸ் கே.அஹமத்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தலைநகர் சென்னை சிவானந்தா சாலையில் இருக்கும் ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தூர்தர்ஷன் சேனலும், காமராஜர் சாலையில் இருக்கும் ஆல் இந்தியா ரேடியோவும் தான் ரஜினியின் ஜெயிலர் படத்தின் கதையைச் சொல்லவில்லை. மற்றபடி சந்து, பொந்து, இண்டு இடுக்கு, குட்டிச்சுவர், கட்டைச்சுவர், ஹைடெக் ஃப்ளாட் என அனைத்திலும் இருக்கும், இயங்கும்(??) சோஷியல் மீடியாக்கள் அம்புட்டுமே நேற்று காலையிலிருந்தே ‘ஜெயிலர்’ கதையை கூவிக்கூவிச் சொல்லிவிட்டதால், நாமளும் சொல்ல விரும்பல.“

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பஞ்சாயத்து நடந்து, பழனி பஞ்சாமிர்தத்தை ஆளாளுக்கு நக்குன கதையா பல கதைகள் நடந்த பின்னால் வந்த படம் என்பதாலும் நெல்சனின் சினிமாப் பயணத்திற்கு ‘மஞ்சள் சிக்னல்’ சிக்கல் விழுந்ததாலும் ரஜினியின் ‘ஜெயிலர்’ பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பதால் நமது பார்வையிலும் ரசனையிலும் பதிந்தவற்றை எழுதியிருக்கிறோம். படம் முழுக்க பல்வேறு நடிப்பு பரிமாணங்கள் மூலம் தனது ரசிகர்களை மட்டுமின்றி, தனது மன ஜெயிலுக்குள் வெகுஜனங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் ரஜினி. இப்போதும் எப்போதும் ஓரிஜினல் சூப்பர் ஸ்டார் தான் தான் என்பதை ரஜினி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் என்பதை  கண்டிப்பாக நாம் சிலாகித்துச் சொல்லியே ஆகவேண்டும்.

பல வருடங்களாக ரஜினி படங்களில் இருக்கும் இண்ட்ரோ சாங், அதிரடி ஃபைட், பஞ்ச் டயலாக் இப்படி எதுவுமே இல்லாமல், இந்த ‘ஜெயிலரி’ல் பூஜை அறையில் தான் ரஜினி எண்ட்ரி சீனே ஆரம்பமாகிறது, திஹார் ஜெயிலில் ஜெயிலராக இருந்து ரிட்டையர்டான பின், மனைவி ரம்யா கிருஷ்ணன், அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் மகன் வசந்த் ரவி, மருமகள் மிர்னாமேனன், பேரன் ரித்விக் இவர்களே உலகம் என வாழ்கிறார் ரஜினி. சாந்தமான முகம், சற்றே தளர் நடை மெல்லிய குரலில் பேச்சு, மகனுக்கும் பேரனுக்கும் ஷூ பாலிஷ் போடுவது, பேரனை யூடியூப்பராக்குவது, இன்னைக்கு தக்காளிச் சட்னி இல்லையா? என மனைவியிடம் ஏக்கத்துடன் கேட்பது, வில்லன் விநாயகத்திடம் உங்கள் நேரில் சந்திச்சு மன்னிப்புக் கேட்கிறேன். என் குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ என கெஞ்சுவது பல சீன்களில் தன்னை ஒரு சராசரி குடும்பத்தலைவனாக காண்பித்து மனசை வருடுகிறார் சூப்பர் ஸ்டார்.

மகனின் நேர்மை குறித்து தன்னிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணும் பெண் போலீஸ் அறந்தாங்கி நிஷாவிடம், “நேர்மையா இல்லேன்னாத்தான் எல்லாரும் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவாங்க. ஆனா நீங்க நேர்மையா இருக்குறான்னு கம்ப்ளெய்ண்ட் பண்றீங்க, சரிம்மா என் மகனிடம் சொல்றேன் என ஒருவித மென்சோக வாய்ஸில் ரஜினி பேசும் அந்த சீன், மகன் இறந்துவிட்டான் என்ற சேதியைக் கேட்டதும் லேசாக தடுமாறி, உடைந்து அழும் அந்த சீனில், வலது கண்ணிலிருந்து வழியும் கண்ணீரை டைட் குளோசப்பில் பார்க்கும் போது, ‘நடிப்புச் சூரன்யா” என வாய்விட்டுச் சொல்லத் தோன்றுகிறது.
தனது குடும்பத்தையே வில்லன் விநாயகம் போட்டுத்தள்ள முடிவெடுத்தவுடன், ஒரு முடிவுடன் களத்தில் இறங்கி, மனைவி மருமகளை டைனிங் டேபிளில் உட்கார வைத்து எதிரே அமரும் ரஜினி. இப்ப இங்க என்ன நடந்தாலும் யாரும் எந்திரிக்கக் கூடாது எனச் சொல்கிறார். அடுத்து துப்பாக்கிக் குண்டு மழை பொழிய வில்லன் ஆட்கள் ரத்தச் சகதியில் சரிய, முகத்தில் ரத்தம் தெறித்ததும் மனைவியும் மருமகளும் நடுங்கியபடி எந்திரிக்கும் போது ஏய்… எந்திரிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல, உட்காரு என உறுமலாக ஒரு விரட்டு மிரட்டுகிறாரே… அடேங்கப்பா மனுசன் பின்னிப் பெடலெடுத்துட்டாருங்க.
கொஞ்சம் அடர்த்தியான மீசை, ஃபிட்டான பாடிக்கு மேட்சிங்கான காக்கி யூனிஃபார்ம் என ஃப்ளாஷ்பேக்கில் வரும் ரஜினியைப் பார்த்தாலே நமக்கு ஃப்ரஷ்னெஸ் ஜாஸ்தியாகிறது. அதே போல் க்ளைமாக்ஸில் வீல்சேரில் செம ஸ்டைலாக உட்கார்ந்து சுருட்டைப் பற்றி வைத்து, சர்ர்ர்ன்னு சேரைத் தள்ளிக் கொண்டு வந்து விநாயகத்தை நெஞ்சில் மிதித்து, தாவாக்கட்டையை வலது காலில் தாங்கும் சீனில் கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணன் வச்சிருக்காரு பாருங்க ஒரு ஆங்கிள்.. அடேங்கப்பா..
படத்தின் பெரும்பலம் அனிருத்தின் பின்னணி இசை என்றால், ரஜினிக்கு சூப்பர் ஃபிட்டாக காஸ்ட்யூம்களை டிசைன் பண்ணிய பல்லவி சிங், முத்துல் ஹஃபீஸ். கன் ஃபைட் ஆக்ஷன் சீக்வென்ஸை கம்போஸ் பண்ணிய ‘ஸ்டன்’ சிவா, மேக்கப் ஹரிநாத் ஆகியோரும் பக்கா பலம். ரஜினியை ஆழ்மனதுக்குள் ரசித்து ரசித்து, காட்சிகளை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் வரிசைப்படுத்தி வயது வித்தியாசயில்லாமல் அனைவரையும் வசப்படுத்திவிட்டார் டைரக்டர் நெல்சன்.
–மதுரைமாறன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.