மாணவிகளை ‘மசாஜ்’ செய்ய வைத்த தலைமை ஆசிரியர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

மாணவிகளை ‘மசாஜ்’ செய்ய வைத்த
தலைமை ஆசிரியர்
‘போக்சோ’ சட்டத்தில் கைது

மாணவிகளை ‘மசாஜ்’ செய்ய வைத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கருங்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா. வயது 52.

இவர் அப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து கை மற்றும் கால்களை அமுக்கிவிடச் செய்து, மசாஜ் செய்ய வைத்து பல்வேறு தொல்லைகள் கொடுத்தும் வந்துள்ளார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

இதுபற்றி தகவலறிந்த அம் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, குற்றச்சாட்டுக்குள்ளான தலைமை ஆசிரியரை கைது செய்யக் கோரி வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4

மேலும், தலைமை ஆசிரியர் ராஜாவை கற்களாலும் செருப்பாலும் தாக்க முயன்றனர். சிலர் அவர் மீது செருப்புகளை வீசினர். இதனால் அங்கே பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியரை போலீஸார் தனி அறையில் வைத்து பாதுகாத்தனர்.

அதன் பின்னர், கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு தலைமை ஆசிரியர் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

பாதிப்புக்குள்ளான மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலங்களைப் பெற்றனர்.அதனடிப்படையில், தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் ராஜாவை பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

5
Leave A Reply

Your email address will not be published.