காவிரி நீர் திறந்துவிடக்கோரி மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
காவிரி நீர் திறந்துவிடக்கோரி
மறியலில் ஈடுபட்ட
கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இன்றி கருகிவரும் நெற் பயிர்களைக் காப்பாற்றவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட ஒன்றிய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தியும் தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி தலைமையில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் சேவையா, விஜயலட்சுமி, இராமச்சந்திரன், பிரபாகர், செல்வகுமார், முகில், கல்யாணி, ராமலிங்கம், சதீஷ்குமார், சம்சுதீன், அய்யாராசு, ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் அக்கட்சியினர் கருகிய நெற்பயிர்களுடன் ஊர்வலமாக வந்து அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு வடக்கு மாவட்ட நிர்வாகக்குழ உறுப்பினர் ஆர்.தில்லைவனம் தலைமை வகித்தார்.