Oceanic edibles international limited  நிறுவனங்கள் மீது ஐஒபி வங்கி 225 கோடி இழப்பீடு புகார் சிபிஐ வழக்கு !

0

Oceanic edibles international limited  நிறுவனங்கள் மீது 225 கோடி இழப்பீடு  சிபிஐ வழக்கு !

சென்னையில் உள்ள வங்கியில் 225 கோடி ரூபாய் கடன் வாங்கி வெளிநாட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

சென்னை சூளைமேடு அப்துல்லா சாலையில் உள்ள  Oceanic edibles international limited நிறுவனம் நாடு முழுவதும் பழம், காய்கறிகள் மற்றும் கடல் தொடர்பான உணவு பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக ஜோசப் ராஜ் ஆரோக்கிய சாமி, விமலா ஜோசப் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் வால்டர் ஆரோக்கியசாமி மற்றும் டாமினிக் சாவியோ ஆகியோர் உள்ளனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

A Joseb Raj, MD, with O Henry Francis,
A Joseb Raj, MD, with O Henry Francis,

இந்த நிறுவனம் விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் தனியாக பண்ணை வைத்து விளைவித்தும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும், சென்னை சூளைமேட்டில் உள்ள தலைமை அலுவலகம், மேற்கு தாம்பரம், தியாகராயநகர், பெருங்குடி, கோடம்பாக்கம், வேளச்சேரி, அமைந்தகரை, பள்ளிக்கரணை உள்ளிட்ட 12 இடங்களில் ஆகஸ்ட் 10 காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

Oceanic edibles international limited  
Oceanic edibles international limited

குறிப்பாக, ஐஒபி வங்கி சார்பில் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது.  கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் பெருக்கத்திற்காக பல்வேறு வங்கியில் இருந்து 104 கோடி ரூபாய் கடன் பெற்று, அந்த பணத்தை வேறு முறைகளில் செலவு செய்து வங்கிகளுக்கு 225 கோடி ரூபாய் வரை இந்த நிறுவனம் இழப்பீடு ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளது.

இந்த விசாரணையில், இந்த நிறுவனம் வெளிநாடுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்ததை அடுத்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து  (ஆகஸ்ட் 10ஆம் தேதி) சோதனை மேற்கொண்டனர்.

மேலும், நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்கள், கன்சல்டிங் சர்வீஸ் அலுவலகம், இவர்களிடம் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனைக்கு பிறகே வெளிநாடுகளில் எவ்வளவு சட்டவிரோதமாக முதலீடு செய்து உள்ளனர் என்பது தொடர்பாக தெரிய வரும் என அமலாக்கத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.