திருச்சி பிரபல பள்ளி நிர்வாகி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் பாலியல் தொந்தரவு வழக்கில் போக்சோவில் கைது !
இந்த நிலையில் பள்ளி நிர்வாகி ஏற்கனவே இந்த பள்ளியில் நடந்த பாலியல் பிரச்சனைகளை வெளியே சொல்லாமல் அப்படியே மறைத்து இருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்த நிலையில்... .
திருச்சி பிரபல பள்ளி நிர்வாகி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் பாலியல் தொந்தரவு வழக்கில் போக்சோவில் கைது !
திருச்சி அருகே பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு எதிரே காவிரிக்கரையில், திருப்பராய்த்துறையில், 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற மாணவா்களுக்கு உணவு, இருப்பிடம், கல்வி வழங்கும் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தில், இரண்டு பள்ளிகளும், ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ITI ) நடத்தப்பட்டு வருகிறது.
படிப்பு, உடற்பயிற்சி, விளையாட்டு, தியானம், கூட்டு வழிபாடு என்று சிறுவர்களுக்கு நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. குடிலில் நிறைய பசுமாடுகள் வளர்க்கப்படுவதால், பாலுக்கு பஞ்சமே இல்லை. தந்தை, அல்லது தாய் யாராவது ஒருவரை இழந்திருந்தால் கூட, அந்த சிறுவன் இங்கு ஆதரவற்றவனாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறான்… எந்தவித ஜாதி, மத – வித்தியாசமுமின்றி, அனைத்து தரப்பினரும் ஏற்கப்படுகிறார்கள்.
கடந்த 2022ம் ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராக்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த பள்ளியில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் சிலர் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் நிர்வாகம் செய்யும் சிலர் மீது பாலியல் புகார் ( ஹேமோசெக்ஸ் ) திருச்சி மத்திய மண்டல ஐஜிக்கு கொடுத்துள்னர். புகார் மீது நடவடிக்கை எடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாருக்கு பரிந்துரை செய்து உள்ளார். பிரச்சனையில் வீரியத்தை புரிந்து கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் உடனே மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, குழந்தைகள் நல அலுவலர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களை உடனடியாக அந்த பள்ளி விடுதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களிடம் விசாரணை செய்தனர். இந்த ஆய்வில் கிட்டதட்ட 7 மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் பள்ளி ஊழியர்களான சிவகிரி (வயது 34), பார்த்திபன் (44), ஏசுராஜ் (32), தனசேகர் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில் நிர்வாகி கருப்பையா ஏற்கனவே இந்த பள்ளியில் நடந்த பாலியல் பிரச்சனைகளை வெளியே சொல்லாமல் அப்படியே மறைத்து இருக்கிறார் என்று விசாரணையில் தெரிய வந்த நிலையில் 12.08.2023 காலை அந்த குடில் முக்கிய நிர்வாகியான கருப்பையா (46) என்பவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவர்களிடம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில் நிர்வாகி கருப்பையா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
மிகவும் பாரம்பரியம் மிக்கதிருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில் இந்த நெருக்கடியான நிலையில் தபோவன குடில் கமிட்டி அவசரமாக கூடி கமிட்டியில் உள்ளவர்கள் மீதே குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைக்கு சென்றதால் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகியை தேர்ந்தெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து உள்ளனர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்த பள்ளியில் படித்த பல்வேறு மாணவர்கள் உலக முழுவதும் மிகப்பெரிய உயரிய அந்தஸ்தில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இந்த குடிலுக்கு ஏராளமான சொத்துகள், நிதிஉதவி என தராளமாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில் பள்ளியில் உள்ள கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகியே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருப்பது திருச்சி மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பள்ளி விடுதி மாணவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா ? என்பது குறித்து குழந்தை சம்மந்தமான அனைத்து விசாரணை கமிட்டிகளும் பல்வேறு முனைகளில் இருந்து விசாரணை நடத்தி வருகிறனர். இன்னும் என்ன என்ன பூதங்கள் கிளம்ப போகிறதோ !…
சார் வணக்கம். தாங்கள் பதிவு செய்துள்ள செய்தி சரியானதாக இருந்தாலும் அதில் இடம் பெற்றுள்ள கட்டட படம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் கட்டடம் ஆகும். செய்தி நடைபெற்ற இடம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில். தபோவனம் மற்றும் குடில் ஆகியவை தனித்தனி நிறுவனங்கள் ஆகும். வெவ்வேறு நிர்வாகம் ஆகும். ஏற்கனவே தபோவன கட்டட படத்தை பதிவு செய்த இணையதள செய்தி நிறுவனத்திற்கு legal notice விடப்பட்டுள்ளது. எனவே தாங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் பின்பக்க கட்டட படத்தை நீக்கி வெளியிடுங்கள். செய்தி நடைபெற்ற இடத்தை அறியாது செய்தி வெளியிடுவது தவறானது. தபோவன கட்டட படத்தை உடனடியாக நீக்குங்கள். மேலும் தபோவனம் என்று வார்த்தை நீக்கப்பட வேண்டும்