திருச்சியில் 26 ரயில்நிலையங்களில் – 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிக்கை தாக்கல் !
திருச்சியில் 26 ரயில்நிலையங்களில் – 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்… திட்டம் அறிக்கை தாக்கல் !
திருச்சி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. இந்நிலையில் பஸ் போக்குவரத்தைத்தொடர்ந்து ரயில் போக்குவரத்துக்கு மக்கள் மாறினர். இந்த இரண்டு போக்குவரத்தையும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் மெட்ரோ போக்குவரத்தானது தொடங்கப்பட்டது. பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தமிழ்நாட்டில் மிக முக்கியமான அடுத்தடுத்த மாவட்டங்களில் விரிவாகம் செய்யப்படுகிறது.
இதையடுத்து கடந்த ஒரு வருடமாக திருச்சி மாநகரம் மட்டுமின்றி அருகிலுள்ள நகரம், ஊராட்சிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 22 சதவீதம் பேர் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றான மாநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலுள்ள மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடும்போது, திருச்சியில் பொதுபோக்குவரத்து அதிகமாக உள்ளது. குறைந்தபட்சம் நாள்தோறும் 6.41 கி.மீ தொலைவுக்கு பேருந்துகளை சராசரியாக பயன்படுத்துகின்றனர். இதுதவிர 11 சதவீதம் பேர் பாதசாரிகளாகவும், 4 சதவீதம் பேர் சைக்கிளிலும், 41 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்திலும், 11 சதவீதம் பேர் காரிலும் செல்கின்றனர். மாநகர சாலைகளில் சராசரியாக 26 கி.மீ சராசரி வேகத்தில் பயணிக்க முடிகிறது. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், இதுவும் சிறப்பாகவே இருக்கிறது.
இந்நிலையில் திருச்சி மெட்ரோ ரயிலுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 45 கிலோ மீட்டருக்கு 2 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதலாவதாக 19 கிமீ தூரத்துக்கு சமயபுரத்தில் இருந்து வயலூர் வரையிலும் 19 ரயில் நிலையங்களும், 2-வது கட்டமாக 26 கிமீ தூரத்துக்கு துவாக்குடியில் இருந்து பஞ்சப்பூர் வரையிலும் மொத்த 26 ரயில் நிலையங்களும் அமைக்கப்பட இருக்கிறது
மேலும் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது இந்த ரயில் நிலையங்கள் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் திருச்சி மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை. !!!