அங்குசம் சேனலில் இணைய

DTCP APPROVAL உதவி செயற்பொறியாளர் அதிகாரிக்கு நெருக்கமான தொழில் அதிபர் வீட்டில் சோதனை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குளித்தலை DTCP APPROVAL உதவி செயற்பொறியாளர் அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை !

குளித்தலை அருகே காணியாளம்பட்டியில் DTCP APPROVAL உதவி செயற்பொறியாளர் நெருங்கிய நண்பர், ரியல் எஸ்டேட் பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் பகுதி ஒடுகம்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் ரமேஷ் வயது 35. இவர் காணியாளம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதோடு, அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு வீட்டு மனைக்கு DTCP APPROVAL வாங்கி கொடுத்தும் வந்துள்ளார்.

சிக்கிய ஆவணங்கள்
சிக்கிய ஆவணங்கள்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இவரது காணியாளம்பட்டி வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவினர் 27.09.2023 இன்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதேபோல் கரூர் – ஈரோடு சாலையில் உள்ள அர்ச்சனா நகரில் உள்ள ரமேஷ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து ஆவணங்களை எடுத்து வந்து கனியாளம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரமேஷுக்கு நெருக்கமான அதிகாரியாக இருந்த கரூர் மாவட்ட நகரமைப்பு மற்றும் ஊரக திட்ட உதவி இயக்குநர் DTCP APPROVAL அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக இருந்த மூக்கையா என்பவருடன் தொடர்பில் இருந்த ரமேஷ் பல ஏக்கர் இடங்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூக்கையாவிற்கு நெருங்கிய நண்பராகவும் ரமேஷ் இருந்து வந்துள்ளார்.

கடவூரில் சோதனை
கடவூரில் சோதனை

கரூரில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு திருப்பத்தூரில் DTCP பிரிவில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்துவரும் மூக்கையா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள திருப்பத்தூர் கோயம்புத்தூர், மதுரை, சென்னை அவரது சொந்த ஊரான விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனை நடத்தி உள்ளனர்.

சோதனையில் பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

-நௌஷாத்,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.