மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் ‘உருக்கிணைப்பு தொழிலகம் அப்டினா என்ன ? உள்ளிட்ட சுவாரஸ்யமான அதியன் பதில் (பகுதி-3)

0

வரும் 2024 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 9 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, 30 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்தளிப்பதாகச் செய்தி உள்ளதே உண்மையா?

உண்மையாக இருந்தால் கூட்டணி கட்சிகளின் காட்டில் நல்ல மழைதான் போங்கள்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

“தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும் தேசியக் கட்சியோடு கூட்டணி அமைப்போம்” – தேமுதிக பிரேமலதாவின் செய்தி குழப்பமாக உள்ளதே அதியன் தெளிவுபடுத்துவாரா?

கூட்டணி யாரோடு என்பதில் தேமுதிகவிற்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை என்பதுதான் தெளிவாகத் தெரிகிறதே. அப்புறம் என்ன?

தேமுதிக பிரேமலதா
தேமுதிக பிரேமலதா

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரை நேரடியாகக் களஆய்வு செய்து ஒளிபரப்பும் இந்திய ஊடகங்களின் துணிச்சலைப் பாராட்டலாமா?

இந்தத் துணிச்சல் இந்தியாவின் மாநிலமாக உள்ள மணிப்பூரில் களஆய்வு செய்ய இந்திய ஊடகங்கள் ஏன் துணிச்சலைப் பெறவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ஊடகம்
ஊடகம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘எதிர்க்கட்சித் துணைத்தலைவர்’ இருக்கையில் பேரவைத் தலைவர் ஏன் முடிவு எடுக்க மறுக்கிறார்?

“யார் எங்கே அமரவேண்டும் என்பது பேரவைத் தலைவரின் அதிகாரத்திற்குட்பட்டது” என்று கலைஞர் இருக்கை விவகாரத்தில் தனபால் கூறியதை மனதில் கொண்டால் இப்பிரச்சனையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அண்மையில் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் விளையாட்டில் மதவெறியை நுழைப்பது நல்லது அல்ல என்ற அமைச்சர் உதயநிதியின் கருத்து குறித்து அதியன் கருதுவது என்ன?

‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது தேசபக்தியோடு தொடர்புடையது என்ற பாஜக வானதிசீனிவாசன் கருத்தோடு உதயநிதியின் கருத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

‘பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது திமுகவை அச்சம் கொள்ளவைத்துள்ளது’ என்ற கோவை சத்யன் கூறியதை நம்பலாமா?

‘இது உண்மை என்றால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாமே’ என்ற திமுகவின் தமிழன் பிரசன்னாவின் பதிலைத் தொடர்ந்து நம்புவது உங்கள் பாடு.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த வியத்தகு சாதனை என்று அதியன் எதை முன்வைப்பார்?

இந்தியா முழுமையும் தனியார் மயத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது, எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரியாக மாற்றி உயர்கல்வியில் வியத்தகு சாதனை படைத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் ‘உருக்கிணைப்பு தொழிலகம்’ என்று பெயர் பலகை பார்த்தேன். ‘உருக்கிணைப்பு’ என்பது புரியவில்லையே?

‘வெல்டிங்’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்தான் உருக்கிணைப்பு என்பது. நல்ல சொல்லாக்கமாக உள்ளது. வாழ்த்துவோம்.

தீபாவளி என்பது சமணச் சமயத்தோடு தொடர்புடையது என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. உண்மை என்ன?

சமணச் சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரர் இறந்து வீடுபேறு அடைந்தார் என்பதைக் குறிக்க அச் சமயத்தினர் தீபம் ஏற்றப்பட்ட விளக்குகளை (ஆவளியாக) வரிசையாக ஏற்றி வைத்தனர். இந்து மதத்திற்குள் சமணம் இருப்பதால் தற்போது தீபாவளி இந்து பண்டிகையாக மாறிவிட்டது.

தீபாவளி
தீபாவளி

நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் யாருக்குச் சாதகமாக அமையும் என்ற கருத்து அதியன் கணிப்பில் உள்ளதா?

காங்கிரஸ், பாஜக இல்லாமல் மிசோ முன்னணி மிசோரத்தில் ஆட்சி அமைக்கும். இராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும். மத்தியப்பிரதேசம், தெலுங்கனா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று ‘சி-வோட்டர்’ கணிப்பு தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் கசப்பாக இருக்கும் என்ற கணிப்பே அதியன் கருத்து.

தொடர் விடுமுறை நாள்களில் சுற்றுலா இடங்களில் மக்கள் குவிவதை அரசு முறைப்படுத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் சொல்லியுள்ளதே….?

கட்டுக்கடங்காமல் மக்கள் குவிவதால் அடிப்படை வசதிகளைக்கூடச் செய்து தரமுடியாமல் மாவட்ட நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. அரசு முறைப்படுத்தினால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

அதியன் படித்த கேள்வி-பதில்களை நாங்கள் அறிந்துகொள்ளலாமா?

தாராளமாக. ராணி-அல்லி பதில்கள், குங்குமம் – பராசக்தி பதில்கள், முரசொலி- கரிகாலன் பதில்கள், சாவி-சாவியின் பதில்கள், துக்ளக்-சோ பதில்கள், குமுதம்-அரசு பதில்கள், ஞாநி-மனிதன் பதில்கள், பாக்கியா-பாக்கியா பதில்கள், விடுதலை-ஆசிரியர் (வீரமணி) பதில்கள், ஜூனியர் விகடன்- சுஜாதா பதில்கள்.

‘லியோ’ பட வெளியீட்டில் திமுக அரசு, நடிகர் விஜய்-க்கு நெருக்கடி தருவதாகச் சீமான், அதிமுக கடம்பூர் ராஜூ கூறியிருப்பதை ஏற்கலாமா?

நடிகர் விஜயின் ஆதரவைப் பெறுவதும், திமுகவுக்கு எதிரான மனநிலைக்கு விஜய் ரசிகர்களை மடைமாற்றம் செய்யும் தந்திர அரசியல்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

உயிரினங்களில் வியப்புக்குரியது என்று எதைச் சொல்லலாம்?

பிளாடிபஸ் என்ற உயிரினத்தைச் சொல்லலாம். காரணம், முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பாலூட்டும் வகையைச் சார்ந்தது. இந்த இருத்தன்மை எந்த உயிரினத்திலும் இல்லை.

பள்ளி, கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனம் இல்லாமல் தற்காலிகமாகவே இருப்பது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பாதிக்கும்தானே?

நிச்சயம். தமிழ்நாடு அரசு வெறும் திட்டங்களை அறிவித்துவிட்டு, கல்வியில் வளர்ச்சி பெற்றுவிட்டோம் என்பது காற்றில் கம்பு சுற்றும் வீண்வேலை.

அதியனை வியப்பில் ஆழ்த்திய பண்டைக் கால உண்மை யாது?

எகிப்தில் பிரமிடுகளை அகழாய்வு செய்தபோது 3000 ஆண்டுகள் பழமையான கெட்டுப்போகாத தேன் கண்டுபிடிக்கப்பட்டது. தேனில் உள்ளே இருந்த மாம்பழங்களும் கெட்டுப்போகாமல் இருந்தன என்பதுதான் வியப்பில் ஆழ்த்திய உண்மை.

தேன்
தேன்

மறைந்த கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலுவைப் பற்றி…..

திருச்சி உறையூரில் பிறந்த சிவ.பாலசுப்பிரமணிதான் ஒரிசாவில் பணியாற்றியபோது அங்கே தமிழ்ச்சங்கத்தை அமைத்துள்ளார். அதனால் அவர் பெயரில் ஒரிசா ஒட்டிக்கொண்டது. உலக நாடுகளில் 200க்கும் மேற்பட்ட கடற்கரை நாடுகளில் தமிழர்கள் உள்ளனர் என்பதை ஆதாரங்களுடன் நிறுவியவர். கடலில் மூழ்கியுள்ள பூம்புகார், குமரிக்கண்டம் குறித்த உண்மைகளை வெளிக்கொணர ஓயாது உழைத்தவர்.

நாகை -இலங்கை காங்கேசன் துறைமுகம் கப்பல் போக்குவரத்து மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறவில்லையே? ஏன்?

திருச்சி, மதுரை, கோவை, சென்னை, நெல்லை, குமரி (திருவனந்தபுரம்) மக்கள் இலங்கை செல்லக் கப்பல் தொகையில் 3 மணி நேரத்திற்குப் பதிலாக ஒருமணி நேரத்தில் விமானப்பயணம் மேற்கொள்ள முடியும். நாகையைச் சுற்றி இருக்கும் மக்கள் நாள்தோறும் இலங்கை சென்றுவர முடியுமா?

புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் அமைச்சர் சந்திரப் பிரியங்கா பொறுப்பிலிருந்து விலகினாரா? நீக்கப்பட்டாரா? ஏன் இந்தத் தள்ளாட்டம்?

புதுச்சேரி என்றாலே தள்ளாட்டம் இருக்கும்தானே. விலகினாரா? நீக்கப்பட்டாரா? என்பது அரசாணை வெளியிட்ட பிறகே உண்மை தெரியவரும்.

 

Leave A Reply

Your email address will not be published.