டிசம்பர் 06 – திருச்சி மரக்கடை அருகில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் !
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர்கள் அ.பைஸ் அகமது MC, முகமது ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தமுமுக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், அஷ்ரப் அலி, மாவட்ட பொருளாளர்கள் ஹுமாயூன் கபீர், காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் முகமது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 06 பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடித்து திருச்சி மரக்கடை அருகில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள், அணிகளின் துணை நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, வார்டு நிர்வாகிகள், கிளை கழக உறுப்பினர்கள், செயல்வீரர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.