ஹீரோயின் ஸ்பெஷல் மீட்…. 50 லட்சம் அவுட்?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2500 கோடி வசூல்
2023 ஜனவரியில் ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’ டிசம்பரில் ‘டங்கி’ என ஒரே ஆண்டில் மூன்று மெகாஹிட் படங்களைக் கொடுத்து, இந்தி சினிமாவின் மற்ற பெரிய ஸ்டார்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ஷாருக்கான். மூன்று படங்களும் சேர்த்து மொத்தம் 2500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததில், அங்குள்ள வினியோகஸ்தர்களும் வெரிஹேப்பியாக இருக்கிறார்கள். ‘ஜவான்’ ஹிட் கொடுத்த டைரக்டர் அட்லீயுடன் மீண்டும் 2025-ல் கைகோர்க்கிறார் ஷாருக்கான்.

அட்லீ - ஷாருக்கான்
அட்லீ – ஷாருக்கான்

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இந்த ஆண்டு அமீர்கான் அல்லது சல்மான் கானின் கால்ஷீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், மும்பையில் சில கோடிகள் பெறுமானமுள்ள ஃப்ளாட்டை வாங்கி, ஹை டெக் அலுவலகமாக மாற்றியுள்ளாராம் அட்லீ.

முருகனே… செல்லக்குமரனே… ஸ்ரீகாந்த் தேவாவின் ஆல்பம்…
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தைப்பூசத்தை முன்னிட்டு, கடவுள் முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை நடிகர்கள் யோகிபாபுவும் நட்டியும் தைப்பூச நாளான ஜனவரி 24-ஆம் தேதி வெளியிட்டனர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இயக்குனர் பவண் எழுதி, சூப்பர் சிங்கர்ஸ் ஸ்ரீநிதா மற்றும் அக்ஷரா லட்சுமி பாடியுள்ள “முருகனே செல்லக்குமரனே” என்ற இந்தப் பாடலை வர்ஷேனியம் ரெக்கார்ட்ஸ் என்ற இசைக் கம்பெனி ரிலீஸ் பண்ணியுள்ளது.

ஸ்ரீகாந்த் தேவா - யோகிபாபு
ஸ்ரீகாந்த் தேவா – யோகிபாபு

மொத்த பட்ஜெட்டும் காலியா?
அஜீத்தை வைத்து மகிழ்திருமேனி டைரக்ட் பண்ணி வரும் ‘விடாமுயற்சி’யின் ஷூட்டிங் 60% தான் முடிந்துள்ளது. ஆனால் மொத்தப் படத்தின் பட்ஜெட்டும் இதற்குள்ளாகவே காலியானதில் கண்ணு முழி பிதுங்கிப் போயுள்ளதாம் லைக்கா. ஏன் இப்படி? எதுக்கு இப்படி? என்னாச்சு? என லைக்கா ஹெட் தமிழ்க்குமரனை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுக்கிறாராம் லைக்கா அதிபர் சுபாஸ்கரன்.

அஜீத்
அஜீத்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

50 லட்சம்…ஹீரோயின் ஸ்பெஷல் மீட்?
இதே கதை தான் விஜய்யை வைத்து ‘கோட்’ படத்தை எடுத்து வரும் ஏஜிஎஸ் கம்பெனியிலும் நடக்குதாம். டைரக்டர் வெங்கட் பிரபுவின் ‘பெர்ஷனல் ஹேப்பி’ செலவுகளும் கம்பெனி கணக்கில் ஏறுவதாலும் ஃபாரின் ஷூட்டிங்கில் ஹீரோயினுடன் ‘ஸ்பெஷல் மீட்’ டுக்காக கொடுத்த 50 லட்சமும் கம்பெனி கணக்கில் சேர்ந்ததாலும் செம டென்ஷனில் இருக்கிறார்களாம் ஏஜிஎஸ் சகோதரர்கள்.

விஜய்
விஜய்

இதெல்லாம் எக்ஸ்கியூடிவ் தயாரிப்பாளர் வெங்கட் மாணிக்கத்திற்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவரின் அஜால் குஜால் லீலைகள்- வேலைகள் கணக்கும் இதில் சேர்ந்திருக்கும் என சந்தேகப்பார்வை வலையை வீசியுள்ளாராம் அர்ச்சனா கல்பாத்தி. வலையில் சிக்கப் போவது வெங்கட் பிரபுவா? வெங்கட் மாணிக்கமா?

அருண்விஜய் மார்க்கெட் நிலவரம்
டைரக்டர் விஜய்-, ஹீரோ அருண் விஜய் காம்பினேஷனில் பொங்கலுக்கு ரிலீசான ‘மிஷன் சேப்டர்-1’ படத்தை, சில கண்டிஷன்களுடன் வாங்கி ரிலீஸ் பண்ணிய லைக்கா, படத்தை சரியான முறையில் புரமோட் பண்ணாததால், 25 கோடியில் படத்தைத் தயாரித்த இரண்டு தயாரிப்பாளர்களுக்கு 10 கோடி தேறாததால் ரொம்பவே நொந்து கிடக்கிறார்களாம்.

அருண்விஜய்
அருண்விஜய்

இதே கதை தான் பாலா டைரக்ஷனில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்திற்கும். இந்தப் படத்தின் பட்ஜெட்டும் 25 கோடிக்கும் மேலாகிவிட்டது. அருண் விஜய்க்கு இப்போதிருக்கும் மார்க்கெட் நிலவரத்தை வைத்துப் பார்த்தால், இதை எப்படி விற்பது? லாபம் பார்ப்பது? என்ற கவலையில் உள்ளாராம் ‘வணங்கானை’ ஆசைப்பட்டு வாங்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

திரிஷாவுக்கு அலுப்புதட்டும்போது…
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் ஹிட்டுக்குப் பிறகு செம தமிழிலும் தெலுங்கிலும் செம பிஸியாகிவிட்டார் த்ரிஷா. கமலுடன் ‘தக் லைஃப்’ தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படம் என 2026 வரை த்ரிஷாவின் கால்ஷீட் டைரி ஃபுல்லாக இருக்கிறதாம். கால்ஷீட் ஃபுல்லாகி மூன்று ஸ்டேட்டுகளுக்கு பறந்து பறந்து நடித்து அலுப்புத்தட்டும் போதெல்லாம், சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்க் ஓட்டல் தான் த்ரிஷாவின் ‘ஃபுல் சார்ஜிங் – பார்க்கிங் பிளேசாம்.

த்ரிஷா
த்ரிஷா

விடிய விடிய சரக்கு லோடு ஏற்றினாலும் விடிந்ததும் ஃப்ரஷ்ஷாக இருப்பதற்குக் காரணம் வெளிநாட்டைச் சேர்ந்த நியூட்ரிஷனையும் பாடி மெயிண்டெனென்ஸ் அட்வைசர் ஒருவரையும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து பெர்மெனண்டாக வச்சிருக்காராம் த்ரிஷா. ஆனால் த்ரிஷாவின் அம்மாவுக்கோ, ’மகளுக்கு 40 வயசுக்கு மேலாகியும் இன்னும் கல்யாணம் கைகூடமாட்டேங்குதே’ என்ற கவலை.

ஹீரோ ஆசை யாரை விட்டுச்சு…
கைவசம் இருக்கும் நான்கைந்து படங்களை இந்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு, 2025-ல் டைரக்டராகப் போகிறாராம் காமெடி நடிகர் யோகிபாபு. அவரே கதையின் நாயகன் என்பதால், ஜிம்முக்குப் போய் பாடியை ஃபிட் – டைட்டாக்குவதுடன், வெயிட்டை ரொம்பவே குறைக்க வேண்டும் என்பதால், உணவுக்கட்டுப்பாட்டில் சின்சியராக கவனம் செலுத்து, ஹேர்ஸ்டைலையும் லைட்டாக ‘சேஞ்ச்’ பண்ணும் முடிவுக்கு வந்திருக்காராம் யோகிபாபு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.