அங்குசம் பார்வையில் ” பிரேமலு “

’ஜஸ்ட் லைக் திஸ்’ பாலிஸியுடன் தமிழ்நாட்டில்  ‘பிரேமலு’வை வினியோகித்திருக்கிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 அங்குசம் பார்வையில் ‘பிரேமலு’

 

  தயாரிப்பு: ’பாவனா ஸ்டுடியோஸ்’ ஃபஹத் பாசில் , திலீஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன். தமிழ்நாடு வினியோகம்: ரெட் ஜெயண்ட் மூவிஸ்.  டைரக்‌ஷன்: க்ரிஷ் ஏ.டி. ஆர்ட்டிஸ்ட்: நாஸ்லன், மமிதா பைஜு, அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர்கான். டெக்னீஷியன்ஸ்: ஒளிப்பதிவு: அஜ்மல் சாபு, இசை: விஷ்ணு விஜய், எடிட்டிங்: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்கள்; பென்னி கட்டப்பனா, ஜோஸ் விஜய். பி.ஆர்.ஓ. சதிஷ், சிவா ( எய்ம்)

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கேரளாவைச் சேர்ந்த சச்சின் ( ஹீரோ நாஸ்லன்) சேலம் கல்லூரியில் படிக்கும் போது, ஒரு பொண்ணை லவ்வுகிறார். அதை அவரிடமே சொல்லும் போது, “நான் ஏற்கனவே ஒருத்தனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கேன். அதனால் சாரி” என டாட்டா காட்டுகிறார். அப்படின்னா இது கண்டிப்பா ஹீரோயினா இருக்க முடியாது என நாம் முடிவு செய்துவிட்டோம். படித்து முடித்தபின், கேரளாவில் பேக்கரி நடத்தும் அப்பாவுக்கு உதவியாக இருக்கிறார். லண்டனில் வேலைக்காக விசா அப்ளை பண்ணுகிறார்.

விசா ரிஜெக்ட் ஆனதால், ஃப்ரண்ட்டுடன் ஹைதரபாத்துக்குப் போய், ஒரு கோச்சிங் செண்டரில் சேர்கிறார். அது சரிப்பட்டுவராமல் போகவே, கே.எஃப்.சி.சிக்கன் மாதிரி டிஎஃப்சி சிக்கன் கடையில் டெலிவரி பாயாக வேலை பார்க்கிறார். ஹீரோ ஹைதரபாத்தில் எண்ட்ரியாகும் நேரத்தில் தான் ரீனு ( ஹீரோயின் மமிதா பைஜு) ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார். ஒரு எதேச்சையான சந்திப்பில் நாஸ்லனும் அவனது நண்பனும் மமிதாவையும் அவரது நண்பி கார்த்திகா( அகிலா பார்கவன்)வையும் மீட் பண்ணுகிறார்கள்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அப்புறம் என்ன ஹீரோவுக்கு ஹீரோயின் மீது லவ் வரும். க்ளைமாக்சில் தான் அதுக்கு குட் ரிசல்ட் கிடைக்கும். இதான் இந்த ‘பிரேமலு’. காதல் பிறப்பது, வளர்வது, ஓகேயாவது எல்லாமே ஹைதரபாத்தில் நடப்பதால், மலையாளத்தில் ‘பிரேமம்’ என்பதை தெலுங்கில் ‘பிரேமலு’ வாக்கியிருக்கிறார்கள்.

நம்ம தமிழ்நாட்டின் சேலத்தில் சில காட்சிகள், தலைநகர் சென்னையில் சில காட்சிகள், சிற்சில காட்சிகளில் சரவெடி காமெடி -தமிழ் வசனங்கள் இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் படம் எந்தவிதத்திலும் நம்மோடு ஒட்டவில்லை. “நாளைக்கு என்ன பண்றதுன்னு நீ யோசிப்ப. ஆனா ரீனு முப்பது வருசத்துக்கு யோசிப்பா. நல்ல வெல்த்தியான குடும்பப் பையனத்தான் அவ கல்யாணம் பண்ணிக்குவா” என அகிலா பார்கவன் பேசும் ஒரு டயலாக் தான் மொத்தப் படமே. அதுக்கு ரெண்டரை மணி நேரத்துக்கு மேல ஜவ்வாக இழுத்து சோதிக்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஹீரோவைவிட ஹீரோயின் மமிதா பைஜு தான் எல்லா ஆங்கிளிலும் எல்லா காஸ்ட்யூமிலும் அம்சமாக இருக்கிறார். நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.  அவரது தோழியாக வரும் அகிலா பார்கவனும் பார்ப்பதற்கு லட்சணமாகவும் இருக்கிறார், ஃபேஸ் எக்ஸ்பிரஸனும் டபுள் ஓகே.  இருவருமே தென்னிந்திய சினிமாவில் ஒரு பவர்ஃபுல் ரவுண்ட் வர வாய்ப்புள்ளது.

ஹைதரபாத்தை நன்றாகவே சுற்றிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பிலிம் சுருள் கண்டு பிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் இது போன்ற கதைகளுடன் ஆயிரக்கணக்கான சினிமாக்கள் வந்துவிட்டன. இப்போது டிஜிட்டல் சிப் காலத்திலும் கூட அதே கதையை தேய் தேய் என தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இன்னொருத்தனுடடைய கிஃப்ட் பார்சலில் வேறொரு கலர் பேப்பரை மேலே ஒட்டி, தனது பெயரை எழுதி  வழங்குவதைப் போலத்தான் இந்த ‘பிரேமலு’.

‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ ஐயும் இந்த ‘பிரேமலு’வையும் தமிழ்நாட்டில் ஏன் வெறி கொண்டு கொண்டாடுகிறார்கள் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. ’ஜஸ்ட் லைக் திஸ்’ பாலிஸியுடன் தமிழ்நாட்டில்  ‘பிரேமலு’வை வினியோகித்திருக்கிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.