“வம்பு பண்ணும் லிங்குசாமி” – ‘போ.இ.வெ.தூ.இ’ பட விழாவில் பொங்கிய தயாரிப்பாளர்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“வம்பு பண்ணும் லிங்குசாமி” – ‘போ.இ.வெ.தூ.இ’ பட விழாவில் பொங்கிய தயாரிப்பாளர்! Shark 9 Pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மே.18-ஆம் தேதி நடந்தது.

இந்நிகழ்வினில்…

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தேனப்பன்
தேனப்பன்

தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியது, “நான் தெலுங்குக்காரன். ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன்.எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள்.இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை வந்தது. இன்னும் பல கதைகள் கேட்டு முடிவு பண்ணலாம் என்ற முடிவிலிருந்தேன். அப்போது நான் நியூசிலாந்திலிருந்தேன்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

காலை 5 மணிக்கு கதை சொல்ல வரச்சொன்னேன். ஆனால் மைக்கேல் 4 மணிக்கே வந்தார். அவர் கதையை விட அவர் அர்ப்பணிப்பு எனக்குப் பிடித்து விட்டது. அவருக்காகத் தான் இந்தப்படம் செய்தேன். அப்போது கொரோனா வந்து எங்கள் கனவுகளைத் தகர்த்துப் போட்டது.

கொரோனா முடிந்த பிறகு மீண்டும் ஆரம்பித்தோம். எனக்கு சினிமா தெரியாது முற்றிலும் புதிது. வியாபாரம் தெரியாது ஆனால் அதில் கருணாஸ் அண்ணா, டிஃபெண்டர் பிரதர்ஸ், ரகுநந்தன் மூவரும் சப்போர்ட் செய்ததால் தான் இந்தப்படம் செய்ய முடிந்தது. இது மிக எமோசனலான படம். கருணாஸ் அண்ணா குழந்தையாக மாறி நடித்திருக்கிறார். விமல் சார் எனக்காக நிறைய வசதிகளைக் குறைத்துக் கொண்டு நடித்தார்.

நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ்

ஒரு நாள் கூட அவர் லேட்டாக வந்ததில்லை. அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் தங்கள் படம் போல வேலை பார்த்தார்கள். இது குடும்பங்களோடு பார்த்து மகிழும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படங்களை இந்தகா கம்பெனி எடுக்கிறார்கள் என அனைவரும் சொல்ல வேண்டும் அது தான் என் நோக்கம்”.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது,”மைக்கேல் கதை சொன்ன போதே எனக்குக் கண்களில் கண்ணீர் வந்தது. அயோத்தி சிறந்த படமாக இருக்கும் என இதே மேடையில் சொன்னேன்.அதே போல் இந்தப்படமும் மிக எமோஷலான படமாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்தப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார்”.

ஹீரோயின் மேரி ரிக்கெட்ஸ்,
“எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநருக்குமாதயாரிப்பாளருக்குமா நன்றி. இந்தப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது.ஒரு அற்புதமான படம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

‘ஜே பேபி’ இயக்குநர் சுரேஷ் மாரி,
“இந்தக் கதையை நான் படித்திருக்கிறேன். ஜே பேபி படத்தில் மைக்கேல் நிறைய வேலை பார்த்திருக்கிறார். அந்தப்படத்தை எல்லோரும் ரசிக்க அவரும் ஒரு காரணம். மைக்கேல் மிகக் கோபக்காரர். ஆனால் குழந்தை மனம் கொண்டவர். நல்ல படைப்பாளி. இந்தப்படம் எல்லோருக்கும் திருப்புமுனையாக இருக்கும்.”

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்,
“நல்ல கதைகளைத் தொடர்ந்து செய்வேன் எனச் சொன்ன தயாரிப்பாளர் சிவாவின் நல்ல மனதிற்கு நன்றி. படத்தின் நாயகன் விமல் எனக்கு நெருங்கிய நண்பர். விலங்கு மூலம் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்”.

இயக்குநர் மைக்கேல் K ராஜா
இயக்குநர் மைக்கேல் K ராஜா

நடிகர் ரோபோ சங்கர்,
“ஜே பேபி இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்தப்படம் மிக அழகாக இருந்தது. அதே போல் போகுமிடம் வெகுதூரமில்லை படமும் இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி”.

நடிகர் அருள் தாஸ்
“இந்தப்படத்தில் எனக்கு மிகவும் சின்ன ரோல் தான். மைக்கேல் எனக்குப் பெரிதாக அறிமுகமில்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்த்தேன் அருமையான இயக்குநர். ஆர்டிஸ்டிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்று தெரிந்தவர். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக வருவார். இது மிகச்சிறந்த ஃபீல் குட் படமாக இருக்கும்”.

தயாரிப்பாளர் பிஎல்.தேனப்பன்,
“இயக்குநர் மைக்கேல் முதலில் என்னிடம் தான் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த கதை. நானே பலருக்குச் சொல்லியிருக்கிறேன். நான் தயாரிக்க வேண்டிய படம். ஒரு சில காரணங்களால் முடியவில்லை. கருணாஸிடம் சொன்னேன் அவர் மூலம் இந்தப்படம் ஆரம்பமாகியுள்ளது” என பேசிய தேனப்பன், டைரக்டர் லிங்குசாமிக்கும் கமலுக்குமிடையே கடுமையான பஞ்சாயத்து நடப்பதைச் சொல்லிவிட்டு, ” கமல் ரொம்ப நல்லவர். லிங்குசாமி தான் ஞானவேல்ராஜாவுக்கு கமல் கால்ஷீட் லெட்டரை கை மாற்றிவிட்டு, இப்போது தேவையில்லாமல் வம்பு பண்ணுகிறார் ” என போட்டுத் தாக்கிவிட்டார்.

இயக்குநர் மைக்கேல் கே.ராஜா,
“இது எனது முதல் மேடை. இந்தக்கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். அதற்கு முன்னால் இன்னும் பல கதைகளோடு சுற்றியுள்ளேன். போகுமிடம் வெகு தூரமில்லை ஆனால் இந்த இடத்திற்கு வர வெகு தூரம் பயணித்துள்ளேன். தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டும், அவர் குழந்தை மாதிரி. கதை கேட்டவுடன் செய்யலாம் என்றார். நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. அப்புறம் மீண்டும் எனக்கு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் ஐடியா இல்லை, ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார்.

அந்த வார்த்தையில் தான் இங்கு வந்துள்ளோம். தேனப்பன் சார் மூலம் கருணாஸ் சாரை சந்தித்து கதை சொன்னேன், நாமே பண்ணலாம் என ஊக்கம் தந்தார். திறமை மட்டும் தான் சினிமாவில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அதில் நம்பிக்கையாக இருங்கள் ஜெயிப்பீர்கள். இந்தக்கதைக்களமே புதிது. ஆனால் இதை நம்பி எடுத்தது மிகப்பெரிய விசயம். தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். படம் நன்றாக வர வேண்டுமென என்னுடன் உழைத்த என் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்”.

நடிகர் கருணாஸ் பேசும் போது
“இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல், இந்தக்கதை இப்படித் தான் வரவேண்டுமென பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்”.

நடிகர் விமல் ,
“எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. தாமோதரன் மற்றும் கோகுல் தான் இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணம். இயக்குநர் கதை சொல்லி பிடித்த பிறகு தான், தயாரிப்பாளர் சிவாவிடம் பேசினேன். வெள்ளை மனத்துக்காரர், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென நினைப்பார். இந்த மேடையில் நாங்கள் எல்லோரும் இருக்க அவர் தான் காரணம். நான் நிறையப் புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன் அவர்கள் எல்லோரும் பெரிய இயக்குநர்களாக இருக்கிறார்கள். அதே போல் மைக்கேலும் பெரிய இயக்குநராக வர வாழ்த்துக்கள்.கருணாஸ் அண்ணனும் நானும் 15 வருடப் பழக்கம் ஆனால் இந்தப்படத்தில் தான் ஒன்று சேர்ந்துள்ளோம்.

விமல், கருணாஸுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்திற்கு
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.