கல்கி 2898 AD’-ல் மலைக்க வைக்கும் மஹிந்திராவின் கார்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கல்கி 2898 AD’-ல் மலைக்க வைக்கும் மஹிந்திராவின் கார்! இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.

சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹிந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, ‘புஜ்ஜி’ யை அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கல்கி 2898 AD
கல்கி 2898 AD

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹிந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆயிரக்கணக்கில் கூடி இவ்வாகனத்தை பார்வையிட்ட மக்கள், பட டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. பான் இந்நியா படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைக்கதை ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.