அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘இருமுடி கட்டு’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: ‘ மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நவீன் யெர்னேனி & ஒய்.ரவிசங்கர், டைரக்டர்: ஷிவா நிர்வானா, ஆர்டிஸ்ட்: ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நட்சத்திரா, சாய்குமார், சுவாசிகா, ரமேஷ் இந்திரா, அஜய் கோஷ், ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா, இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்: பிரவீன்புடி, ஸ்டண்ட்: ராம் -லக்ஷ்மண், ரியல் சதீஷ், நடனம்: பாபா பாஸ்கர் & வி.ஜே.சேகர், பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்

நம்ம ஊருல கார்த்திகை மாதம் சபரிமலை சீசன்ல தானே இந்த மாதிரி படத்தை இறக்குவாய்ங்க. இப்ப ஆவணி மாதம் ‘இருமுடி கட்டு’ன்னு இறக்கிருக்காய்ங்க… அதுவும் ஆந்திராவிலிருந்து…. சரி  பக்திப் படம் பார்த்து ரொம்ப வருஷமாச்சு.. அதையும் தான் பார்ப்போமேன்னு தியேட்டருக்குள் போனோம். மொத சீனே… ஒரு லாரிய வழிமறிச்சு டிரைவரை நாலு சாத்து சாத்தி ஆத்தூரை  (தமிழர்களுக்காக நம்ம திண்டுக்கல் ஆத்தூர்  தான்) கிராஸ் பண்றவரை ஹாரன் அடிக்கக் கூடாதுன்னு மிரட்டி அனுப்புகிறார் ஹீரோ ரவி தேஜா.

இந்த வார அங்குசம் வார இதழில்…

'இருமுடி கட்டு' இது ஒரு டிசைனான ஐயப்ப பக்திப் படமா இருக்கும் போலயேன்னு நினைச்சுக்கிட்டோம். கட் பண்ணா ஃப்ளாஷ் பேக் ஓப்பன். ஆத்தூரில் வாழை விவசாயி ரவி தேஜா. மனைவி பிரியா பவானி சங்கர், மகள் நட்சத்திரா. ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் 41 நாள் மட்டும் சரக்கடிக்க மாட்டார். மலைக்குப் போய்விட்டு ஊருக்கு வந்து இறங்கியது மே ஃபுல் சரக்கு தான். என்ன தான் போதைப் பார்ட்டியா இருந்தாலும் மகள் மீது பேரன்பும் பெரும் பாசமும் கொண்டவர் ரவி தேஜா. மகள் என்ன சொன்னாலும் கேட்பார்.

அதேபோல் குருசாமி ( சாய் குமார்) மகள் உட்பட எல்லா பெண் குழந்தைகளையும் தனது மகள் போல நினைப்பவர். அந்த ஊரில் இருக்கும் அரசுப் பள்ளி டீச்சர் சுவாசிகா, பெண் பிள்ளைகளிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் இம்சை கொடுப்பார். இந்த நிலையில் தான் சிறுமி நட்சத்திரா திடீரென காட்டுப் பகுதியில் இறந்து கிடக்கிறாள். நட்சத்திரா எப்படி செத்தாள்? சுவாசிகாவின் ஸ்பெஷல் கிளாஸ் இம்சை என்ன? இதான் பக்கா ஆக்ஷன் & ஃபேமிலி ஜானரில் வந்திருக்கும் ‘இருமுடி கட்டு’.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

'இருமுடி கட்டு' தெலுங்கு ஹீரோ ரவி தேஜா நடித்த முழு படத்தையும் இதுவரை நாம் பார்த்ததில்லை, பார்க்க வாய்ப்பும் இல்லை. சில தெலுங்கு டிவி சேனல்கள், யூடிப்பில் படுபயங்கரமா டான்ஸ் ஆடுனதைத் தான் பார்த்திருக்கோம். இப்ப தான் முழு படத்தையும் பார்க்கிறோம். சும்மா சொல்லக் கூடாது மனுசன் நல்லாத்தான் நடிச்சுருக்காரு. மனைவி பிரியா பவானி சங்கரிடம் காட்டும் அன்பு, மகள் மீது பொழியும் பாசம், தீயவர்களை மகள் அடையாளம் காட்டியதும், அவர்களை பொளந்து கட்டுவது, ஐயப்பன் அருள் வேண்டி மனமுருகி வேண்டுவது, க்ளைமாக்ஸில் கொடிய மனித மிருகங்களான  எம்.எல்.ஏ. ரமேஷ் இந்திராவையும் டீச்சர் சுவாசிகாவையும் பொலி போடுவது என படம் முழுக்க நிறைந்து விட்டார் ரவி தேஜா.

நம்ம ஊரு பிரியா பவானி சங்கரை நம்ம ஊரு சினிமாவுல ஆளையே காணோமே ன்னு இரண்டு வாரங்களுக்கு முன்பு யோசனை ஓடுச்சு. இந்த இருமுடி கட்டு ல நடுத்தர குடும்பத்தின் தலைவலியாக…. அதற்கேற்ற காஸ்ட்யூமில் வந்து கவனம் ஈர்க்கிறார். ரவி தேஜா வின் மகள் நட்சத்திரா தான் படத்தின் பெரும் பலம். மாநிறம், அழகான கண்கள், அப்பாவிடம் அதீத அன்பு, கொடூர வில்லன்களை அடையாளம் காட்டும் ஆவேசம், “குடிக்கலேன்னா கை நடுங்கும், தூக்கம் வராதும்மா” எனச் சொல்லும் ரவி தேஜா விடம் “நான் கையப்பிடிச்சுக்குறேன்பா… நான் தூங்க வைக்கிறேன் பா” என ஏக்கத்துடன் சொல்லி அப்பாவின் குடியை நிறுத்துவது உட்பட பல சீன்களில் ஜொலிக்கிறார் நட்சத்திரா. குடிகார அப்பன் களை திருத்த நல்ல ஐடியா டைரக்டரே…. மற்றவர்களுக்கு மாலை போடும் குருசாமியாக சாய் குமாரின் சுயரூபத்தை க்ளைமாக்ஸில் காட்டி ட்விஸ்ட் வைத்திருக்கார் டைரக்டர் ஷிவா நிர்வானா.

'இருமுடி கட்டு' “பொம்பள பிள்ளைகளுக்கு பயம் தான் பாதுகாப்பு” ன்னு ஒரு இடத்தில் வசனம் வைத்த டைரக்டர்…. க்ளைமாக்ஸில் “இவனை (எம்.எல்.ஏ.) போட்டுத் தள்ளிட்டு தைரியமா வாழப் போறீங்களா…? இல்லை கடைசி வரை பயத்தோடயே வாழப் போறீங்களா?” ன்னு சிறுமிகளிடம் ரவி தேஜாவை பேச வைத்து சபாஷ் வாங்குகிறார் ( வசனகர்த்தா நம்ம ஊரு தான்) டைரக்டர் ஷிவா நிர்வானா.  படத்தில் இரண்டே சீன்கள் தான் இருமுடி கட்டும் சீன். அந்த இரண்டிலும் ஜி.வி.பிரகாஷின் ஐயப்பன் பாடல் செம ஜோர். தெலுங்குப் படம் என்றாலும் தமிழ் வசன உச்சரிப்பில் கவனம் செலுத்தி…. இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் தொய்வில்லாத திரைக்கதையால் ரொம்பவே ரசிக்க வைத்துவிட்டார் டைரக்டர் ஷிவா நிர்வானா.

அங்குசம் பார்வையில் ‘இருமுடி கட்டு’ 48/100

  — ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.