பட்டாவில் பெயர் சேர்க்க நீக்க லஞ்சம் – தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு !

2

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பட்டாவில் தனிநபர் பெயரை சேர்க்கவும் லஞ்சம் ; தனிநபரை நீக்க நில உரிமையாளரிடமும் லஞ்சம் தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு –  நில அபகரிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறும் படி கூலிப்படையை வைத்து மிரட்டியதாக  வாணியம்பாடி வட்டாட்சியருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக ஜோலார்பேட்டை காவல் துறையினர் 3 வாரங்களில் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்  ஏலகிரிமலை மீது உள்ள அத்தனாவூரைச் சேர்ந்த குமரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், எனக்கான தனிபட்டாவில், கோவிந்தராஜ் என்பவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு
என் பட்டாவில் அவரின் பெயரை  கூட்டுப்பட்டாவாக  சேர்த்தார்  அப்போதைய திருப்பத்தூர் வட்டாட்சியராக இருந்த  சிவப்பிரகாசம்  , இது குறித்து தாசில்தார் சிவப்பிரகாசத்திடம் முறையிட்ட போது அதற்கு தீர்வுகாண வேண்டும் என்றால் ரூ. 20 லட்சத்தை தரவேண்டும் என்றார்  .

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தாசில்தார், சிவப்பிரகாசம்
தாசில்தார், சிவப்பிரகாசம்

இதனால் விரக்தியடைந்த நான் அப்போது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தேன்  2023 நவம்: 25 தேதி அந்த மனு   நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. புகார் குறித்து மனுதாரகுக்கும். தாசில்தாருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என  அப்போதைய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியனுக்கு உத்தரவிட்டிருந்தார் , இதில்  விசாரணை நடத்திய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக  தெரிவித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இந்த நிலையில்  தனது புகாரை திரும்பப்பெறுமாறு  திருப்பத்தூரில் இருந்து மறுதலாகி தற்போது வாணியம்பாடி வட்டாட்சியராக பணிபுரியும் சிவப்பிரகாசம் கூலிப்படையினரை வைத்து மிரட்டுவதாக கூறி  இதுதொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் , புகாரில் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரை முறையாக விசாரிக்க ஜோலார்பேட்டை காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தார்.

கடந்த மே – 31 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் சிவப்பிரகாசத்திற்கு  எதிரான புகாரில்  3 வாரங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது வட்டாட்சியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக  , குமரேசன் புகார் குறித்து சில செய்தித்தாள்களை பார்த்து அதிர்ந்த வட்டாட்சியர் சிவப்பிரகாசம்  திருப்பத்தூர்  வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் சிலர்  மீது போலி முத்திரைதாள்களை வைத்துள்ளதாகவும் அவர்களிடம் தனது பெயரில் போலியான  ரப்பர் ஸ்டாம்ப்கள் வைத்திருப்பதாக கூறி அளித்த புகாரின்  பேரில்  போலீசார்
ஒரு சிலரை கைது செய்ததாக ஒரு நாளிதழில் செய்தியாக வந்தது

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

2 Comments
  1. K.P.VENKATESAN. says

    It’s not a punishment.

  2. […] எப்ஐஆர் பதிந்தது. இதன் எதிரொலியாக “லஞ்சம் கேட்ட தாசில்தாரருக்கு ஆதரவ… என்னும் தலைப்பில் கடந்த ஜூலை 15 […]

Leave A Reply

Your email address will not be published.