அடுத்தடுத்து போலி பத்திரங்கள் கண்டுபிடிப்பு –   புரோக்கர்களே  காரணம் என மாவட்ட பதிவாளர் கைவிரிப்பு !

1

அடுத்தடுத்து போலி பத்திரங்கள் கண்டுபிடிப்பு –   புரோக்கர்களே  காரணம் என மாவட்ட பதிவாளர் கைவிரிப்பு !

நிலம், வீடுகள் என எந்தவிதமான சொத்துக்களை வாங்கினாலும் அதற்கு பட்டாக்கள்  அவசியம். பட்டா இருந்தால்தான்,  சொத்துக்களின்   உரிமையாளர் என்பதற்கு அத்தாட்சியாகும்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவில், மோசடிகள் நடப்பது  தொடர்கதையாகி வருகிறது இதனை களைவதற்கான முயற்சியில் தமிழ்நாடு பதிவுத்துறை தொடர்ந்து பல்வேறு வகையில்  புது புது யுக்திகளை மேற்கொண்டு வருகிறது  சமீபத்தில்கூட, காலி மனை பத்திரங்கள் பதிய நிலத்தின் புகைப்படம் கட்டாயமாக்கியது இதுபோன்ற முயற்சிகளால் போலி பட்டாக்களின் நடமாட்டங்கள் ஓரளவு குறைந்து வருகின்றன.

மாவட்ட பதிவாளர் (தணிக்கை) செந்தூர் பாண்டியன்
மாவட்ட பதிவாளர் (தணிக்கை) செந்தூர் பாண்டியன்

- Advertisement -

அதேசமயம், பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்  , பணத்தை பெற்றுக்கொண்டு போலி ஆவணம் தயாரிக்கும் ஆவன எழுத்தர்கள் ஆகியோர்  மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனடியாக கைது நடவடிக்கையும் பாய்கிறது .

சமீப காலமாக திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர்  சார்பதிவாளர் அலுவலகங்களில் அடுத்தடுத்து  போலி பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பூதாகரமாகி வருகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரை  சேர்ந்த ஆயிஷா சித்தி. என்பவர்    ஆள்மாறாட்டம் செய்து 1,800 சதுர அடி இடத்தை கயல்விழி என்பவருக்கு கடந்த 2016 – ம் ஆண்டு  திருப்பத்தூர் சார்பதிவாளர் இணை 2 அலுவலகத்தில் பத்திரபதிவு செய்து விற்றுள்ளார் ,  தகவலறிந்த ஆயிஷா உறவினரான  விளாங்குப்பத்தை  சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட பதிவாளரிடம் அளித்த புகாரில் ஆள்மாறாட்டத்தில்  போலி பத்திரபதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும்  ஆள்மாறாட்டத்திற்கு துணைப் போன கொரட்டி மணி  என்பவரின்  பத்திர எழுத்தர்  உரிமத்தை ரத்து செய்தனர்.

மாவட்ட பதிவாளர். பிரகாஷ்
மாவட்ட பதிவாளர். பிரகாஷ்
4 bismi svs

ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை கணேசன் என்பவர் தனது மனைவி பெயரில்  எழுதி வைத்த 20,180 சதுர அடி இடத்தை  மாணிக்கம் என்பவருக்கு ஆள் மாறாட்டம் செய்து 2007 ம் ஆண்டு ஜோலார்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளதாக ராஜா என்பவர் அளித்த  புகாரின் பேரில் விசாரணை செய்ததில்  ஆள்மாறாட்டம் செய்து  போலி பத்திர பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  பத்திர எழுத்தர் சஞ்சீவி  என்பவருடைய ஆவன எழுத்தர் உரிமைத்தையும்  ரத்து செய்தனர்.

வாணியம்பாடி
வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி  தன் மூத்த மகள் கிரிஜாவுக்கு தானமாக கொடுத்த  பூர்வீக வீட்டை  பத்திரம் தாயார் செய்து தனிநபருக்கு விற்பனை செய்துவிட்டாதக கூறி மற்ற 3 சகோதரிகள் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலக முன் போரட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும்  அரங்கேறியது.

ஆம்பூர்
கடந்த மே-27 அன்று ஆம்பூரில் உள்ள தனியார் வங்கியில் இல்லாத நிலத்தின் மீது  போலி  ஆவணங்கள்  தயாரித்து  தானியார் வங்கியில்  ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இப்படி அடுத்தடுத்து  போலி பத்திரங்கள் விவகாரம்  பூதாகரமாகி வரும் நிலையில்  போலி முத்திரைத்தாள்கள் , போலி ரப்பர் ஸ்டாம்ப்ஸ், போலி கையெழுத்து ஆள்மாறாட்டம்,  என திருப்பத்தூர் மாவட்டமே கதி கலங்க   தங்களது நிலங்கள் தன் பெயரில்தான்  உள்ளதா?  என கண்டறிய   சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சொத்தின் உரிமையாளர்கள் படையெடுத்து வருகின்றனர்

இதுகுறித்து மாவட்ட பதிவாளர்கள் பிரகாஷ் மற்றும் செந்தூர பாண்டியன் (தணிக்கை)  ஆகியோர் கூறியதாவது

இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில்  திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வாணியம்பாடி உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகம் இருந்து வருவதால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது,  இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்  மேலும் பத்திர எழுத்தர்கள் முறையான பத்திர பதிவுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்களை வைத்து, பதிவு செய்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும்   குறிப்பிட்ட இந்த போலி பத்திரப்பதிவுகளுக்கு  துணை போன  சார்பதிவாளர்கள் 2 பேரையும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பத்திரப்பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வாணியம்பாடி போராட்டம் குறித்து  கேட்டபோது ?  கிரிஜா பெயருக்கு பட்டா மாற்றம் செய்து  12 ஆண்டுகள் கடந்து விட்டதால் இந்த அலுவலகத்தில் இது தொடர்பாக தீர்வு கான முடியாது. அதனால்  கிரிஜாவின் சகோதரிகள் இதற்கான தீர்வை நீதிமன்றத்தைதான்  நாட வேண்டும் வேண்டும் என்றார்.

இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் வாணியம்பாடி உள்ளிட்ட  சார் பதிவாளர் அலுவலகங்கள்  உள்ளதாக மாவட்ட பதிவாளரே  ஒப்புக்கொண்டது அதிர்ச்சியும்  ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது  போலி பத்திரங்கள் பதிந்த  “சார் பதிவாளர்கள் ஆவன எழுத்தர்கள் கைது எப்போது ?  என கேள்விகள் எழாமல் இல்லை  Mr. ஆபிசர்ஸ்”

– மணிகண்டன்

5 national kavi
1 Comment
  1. P.sethu raman says

    நல்ல தொகை கிடைத்தால் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி பதிற பதிவு செய்து கொடுப்பார்கள்.உயர் அதிகாரிகள் இது குறித்து ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டர்கள்.பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியது தான்.குற்றம் செய்ய உடந்தையாக உள்ள அரசு ஊழியர்களுக்கு தான் முதல் தண்டனை என்ற சட்டம் பேருக்கு தான் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.