ரஜினியின் ‘கூலி’ யில் கமல் மகள்!.
ரஜினியின் ‘கூலி’ யில் கமல் மகள்!. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ கூலி’ படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இன்று ஸ்டார்ட் ஆகியுள்ளது.
இதற்காக நேற்று சென்னையில் இருந்து ஹைதராபாத் கிளம்பினார் ரஜினி. ஜூன் மாதமே ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என முதலில் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து ரஜினியிடம் சொல்லப்பட்டது. ஆனால் ஸ்கிரிப்ட்டில் பல திருத்தங்களை ரஜினி சொன்னதால் பக்காவாக எல்லாத்தையும் முடித்து விட்டு இன்று ஷூட்டிங் களத்தில் இறங்கிவிட்டார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.
இந்த கூலியில் கூடுதல் சிறப்பு என்னன்னா…. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆத்மார்த்த நண்பன் உலக நாயகன் கமல் மகள் ஸ்ருதி ஹாசன் நடித்திருப்பது தான். அதுவும் முதல் நாள் ஷூட்டிங்கிலேயே இணைந்திருப்பது தான். இதை தனது இன்ஸ்டாகிராமில் செம ஹேப்பி ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.
கரும்பு தின்ன கூலி. ஸ்ருதி ஹாசன் குதூகலம். ரஜினியின் ‘கூலி’ஆரம்பமே அமர்க்களம் தான். போகப்போக குதூகலம் தான். .
-மதுரை மாறன்.