விருதுநகரில் பொது பாதை ஆக்கிரமிப்பு போராட்டம் – போலீசார் கண் முன்னே அடாவடி பண்ணிய பெண் ஆக்கிரமிப்பாளர் ! வீடியோ
விருதுநகரில் பொது பாதை ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினரின் கண் முன்னே கொலை மிரட்டல்
பொது பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் காவல்துறையினரின் கண் முன்னே ஆக்கிரமிப்பு செய்த நபர் சட்டையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு
விருதுநகர் ஆர்.ஆர் .நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் சர்வே எண் 302/18 பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அரசு பொதுப் பாதை உள்ளதாகவும், இந்தப் பாதையை ஒரு சில தனியார் நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்துள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் ஜூலை 2 ம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்த நபர் சுற்றியுள்ள பொதுமக்களை இந்த பாதைக்குள் வரக்கூடாது என ரவுடிகளை வைத்து மிரட்டியும் பொது மக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கறிஞர் ஞானப்பிரகாசம் வீடை கடப்பாரையால் தாக்கி வீட்டை உடைத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆக்கிரமிப்பு மற்றும் கொலை மிரட்டலையும் கண்டித்து காவல்துறையின் அனுமதியுடன் ஆர்.ஆர். நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அப்போது திடீரென அதிவேகமாக கார் ஒன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்குள் வந்துள்ளது.
வீடியோ லிங்
அதில் இறங்கிய பெண்மணி ஒருவர் காவல்துறையினரின் முன்பாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பாலமுருகனின் சட்டையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் நேரடியாக ஆபாசமாக பேசி அங்கு இருந்து தனது காரை எடுத்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அந்தப் பெண்ணை கைது செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பின்னர் காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்வதாக சமாதானம் செய்து போராட்டக்காரர்களை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் விசாரணையில், ஆக்கிரமிப்பு செய்தவர்களின் உறவினரான சென்னையைச் சேர்ந்த மனோரஞ்சிதம் என்பவர் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தும், தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 32 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் பேசுகையில் அரசு பொது பாதையை ஆக்கிரமித்து பலமுறை பொதுமக்களுக்கு நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,
தற்போது இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய எங்கள் மீது நேரடியாகவே காவல் துறையினரின் கண் முன்னே சட்டையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
– மாரீஸ்வரன்
வீடியோ லிங்