மேட்டூர் முதல் பூம்புகார் வரை காவிரி கரையோரம் ஒரு கோடி பனை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகளை தேடி என்கின்ற பனை விதைகள் சேகரிப்புப் பணி  2-வது கட்டமாக செப்டம்பர் – 21 அன்று திருச்சியில் நடைபெற்றது. பனை விதைகள் சேகரிக்கும் பணியில் தண்ணீர் அமைப்பு உறுப்பினர்கள்,  இயல் நாட்டார் கலை நடுவம் மாணவர்கள்,  காவேரி மகளிர் கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் ஆகியோர் இணைந்து 3000 மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும் தமிழ்நாட்டில் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து காவிரியில் மேட்டூர் அணையில் தொடங்கி பூம்புகார் வரை காவிரியின் இரு கரைகளிலும் ஒரு கோடி பனை விதைகளை நடுகின்ற பணியானது 22.09.24 திருச்சியில் விதை இருக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதனையொட்டி 2-வது கட்டமாக,  திருச்சியில் தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகளைத் தேடி என்கின்ற பனை விதைகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. திருச்சியில் கே.கே நகர் பகுதி அருகில் உள்ள ஓலையூர், ஆவூர் ரோடு பகுதிகளில் காலையில் நடைபெற்றது. பனை விதை மாநில விதை மாநில முழுக்க அதை விதை என்ற உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பனை விதைகள் தான் நிலத்தினுடைய ஆதாரம் நில வளத்தினுடைய ஆதாரம் நிலத்தடி நீரின் உடைய ஆதாரம் நீர் நிலைகளின்  ஆதாரம் எனவே ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினுடைய அடையாளமாக அறமாக அரணாக இருக்கக்கூடிய பனை விதைகளை சேகரிப்போம் தொடர்ந்து நிலவளம் காப்போம் நீர் வளம் காப்போம் என்கின்ற உறுதி மொழியை அனைத்து மாணவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

பனை விதையானது உச்சி முதல் வேர் வரை மருத்துவ பொருளாகவும் இயற்கை மூலிகைப் பொருளாகவும் குறிப்பாக பனை பனைவெல்லம் பனை கிழங்கு பனை ஓலை பனை மட்டை பனை நுங்குகள் பனை மரங்கள் என ஒவ்வொரு பகுதியும் உச்சி முதல் வேர் வரை இயற்கைக்கும் மக்களுக்கும் உணவாக மருந்தாக சூழலை பாதுகாக்கிற அரணாக நமக்கு பயன்பாட்டில் இருக்கிறது.

அங்குசம் கல்வி சேனல் -

எனவே, ஆதிகாலத்து பனை அந்தப் பனையை சேகரிப்பதன் வாயிலாக நிலத்தை நில வளங்களை நாம் மீட்டெடுப்போம் என்கின்ற அடிப்படையில் தண்ணீர் அமைப்பு சார்பாக பனை விதைகள் தேடி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் திரு கே.சி.நீலமேகம், செயலாளர், பேராசிரியர் திரு.கி .சதீஷ்குமார்,  சாத்தனூர் குமரன், உள்ளிட்டோர் மற்றும் இயல் நாட்டார் கலை நடுவத்தைச் சேர்ந்த ஆசிரியை சந்தியா, அகிலா  மற்றும் காவேரி மகளிர்  கல்லூரி ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகள் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர்.

கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற பேராசிரியர்கள் அனு, கீர்த்தனா ஒருங்கிணைத்தார்கள்.

     

–  அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.