பள்ளிக்கல்வித்துறையின் “மகா விஷ்ணு” சிகரம் சதீஷ் ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திப்பிழந்து வரும் பள்ளிக்கல்வித்துறையை எண்ணி எங்களைப் போன்ற ஆட்சியின் மீது  பற்று கொண்டவர்கள் கவலையுறாமல் இருக்க முடியவில்லை.” என்பதாக வேதனை தெரிவித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த பொறுப்பாளரும் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளருமான வா.அண்ணாமலை.

பள்ளிக்கல்வித்துறையில் சமீப காலமாக நடந்துவரும் நிகழ்வுகளை குறிப்பிட்டு அவ்வப்போது அவர் எழுப்பிவரும் விமர்சனங்கள், கருத்துக்களையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், கல்வியாளர்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையெல்லாம் புறம்தள்ளி ஒதுக்கிவிட்டு தன்னிச்சையாகவும் விளம்பரம் தேடும் நோக்கிலேயேதான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் செயல்பாடு அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார், அவர்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

அவரது அறிக்கையில், ”பெருமிதத்துடன் முப்பெரும் விழா கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் மூடநம்பிக்கை பேச்சாளர்கள் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் என்ற பெயரில் 13 பள்ளிகளுக்கு அனுமதி பெற்று, சென்னையில் உள்ள இரண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் விதவைகள் பற்றிய போதனைகள் செய்த மகா விஷ்ணுக்கள் வளர்ந்து வரும் பேராபத்தினை கண்டு அதிர்ச்சியுற்று வருகிறோம்!

அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் கல்வி  பெறவேண்டிய இளம்பருவ மாணவர்களிடம் அழகில்லாத பெண்களாக இருப்பதற்கு காரணம் முற்பிறவியில் அவர்கள் செய்த பாவம்தான்  என்று பேசவும், சில பிள்ளைகள் அது கேட்டு தேம்பி அழுவதையும் கவலையுடன்  காணொளியில் காணும்போது  தந்தை பெரியார் பிறந்த மண்ணில், பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில், தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த மண்ணில் தான் வாழ்கிறோமா?.. என்ற கேள்விக்குறி நம்மை சிந்திக்க வைக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அமெரிக்காவிலிருந்து தாங்கள் விடுத்த அழுத்தமான ஆணையின் பேரில் மகாவிஷ்ணுக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள். நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.  மகா விஷ்ணுவை குருஜி என்று அழைத்து பக்தி காட்டும் காணொளியில் கேட்க முடிகிறது. மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக அமல்படுத்தி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அதற்கு துணை போகும் சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிரதம போஜனா திட்டம் என்ற பெயரில் திருச்சி மாவட்ட  ஆட்சியர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மக்களிடம் நன்கொடை வாங்கி தலைவாழை நல்விருந்து அளிக்கச் சொல்லி ஒருவார காலமாக சுற்றறிக்கை அனுப்பி வருவது கண்டு கோபப்படாமல் இருக்க முடியவில்லை.

 

ஒரு மூத்த அமைச்சர் பணியாற்றக்கூடிய திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிறந்த  திருச்சி மாவட்டத்தில் ஒருவார காலமாக பிரதம போஜனா தலைவாழை நல்விருந்து நடத்த சுற்றறிக்கை அனுப்பி  வருகிறார்கள் என்றால், மத்திய அரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கல்வித்துறையினை  எண்ணி கோபப்படுவதா? வேதனையுறுவதா?.. என்று தெரியவில்லை.

மூன்று மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலில் விநாயகர் சதுர்த்தி பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திராவிடர் கழக தலைவர், மாண்புமிகு  ஆசிரியர் ஐயா அவர்களுடன் நாங்கள் கொண்டுள்ள தொடர்பின் காரணமாக அவர்கள் தலையிட்டதால் உடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேற்று முதல் நாள் பள்ளிப் பார்வையின் போது மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் அளிக்காத ஆசிரியர்களை விருப்ப ஓய்வில் சென்று விடுங்கள்! என்று அவர்கள் முன்னாலேயே ஆணையிடுகிறார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 12 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. காலிப் பணியிடங்கள் நினைவிடங்களாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையிலும்  ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தல் பணியாற்றி வருகிறார்கள். கற்பித்தல் பணிக்கு பயிற்சி பெற்றவர்கள் நாங்கள்! நிர்வாகத்திற்கு பயிற்சி பெற்றவர்கள் ஆட்சியாளர்கள்!

என்றும் எங்களின் நெஞ்சத்தில் நிறைந்துள்ள அன்பிலார் அவர்களின் பேரன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பு ஏற்றதற்கு பிறகு பள்ளி கல்வித்துறையில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்கல்வித்துறையை பார்வையிடலாம்!.. தலையிடலாம்!.. எதைப் பற்றியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கவலைப்பட மாட்டார்.

யார் கட்டுப்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை  நடந்தாலும் அவர் ஏதாவது ஒருவகையில் விளம்பரத்தை தேடிக் கொண்டிருக்கிறார். தொடரும் ஆசிரியர்கள் போராட்டம். தீர்வு காண்பதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்கறை காட்டுகிறாரா?

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலம் தொடங்கி தொடர்ந்து 60 ஆண்டு காலமாக ஒன்றிய அளவில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் முன்னுரிமைப்படி,  ஆசிரியர்கள் நியமனம், மாறுதல்கள் நடைபெற்று வந்தது. இவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 60 ஆண்டு கால நடைமுறை மரபினை புறந்தள்ளிவிட்டு ஒன்றிய அளவில் இருந்த ஆசிரியர்கள் முன்னுரிமையினை மாற்றி மாநில அளவில் கொண்டு வந்து, ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்களை கேட்காமலும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆழமாக புரிந்து கொள்ளாமலும் அரசாணை 243/23.12.2023 வெளியிட்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

10% ஆசிரியர்களின் நன்மைக்காக 90% பெண்ணாசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். என்று நாம் தெளிவு படுத்தினோம். அரசாணை 243 ஐ வெளியிட்டமைக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு புகழாரம் சூட்டி மகிழ்ந்துள்ளார். ஒட்டுமொத்த தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் எதிர்ப்பு வெடித்து கிளம்பி போராட்ட வடிவத்தில் வந்து கொண்டுள்ளது.

1985 ஜேக்டீ போராட்டத்தில் 40 நாட்கள் சிறை சென்றவர்கள்,  1988 ஜாக்டி-ஜியோ போராட்டம், 2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்திலும் சரி  பங்கேற்றவர்கள், சிறைசென்றவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட போதும்கூட டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை கற்பித்தல் பணிக்காக பெற்று வந்ததுதான் வரலாறு.

தலைவர் கலைஞர் அவர்கள் போராடி சிறை சென்றவர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி அளித்து மகிழ்ந்தார்கள்.  உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் மூத்த அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி அவர்கள் ஜாக்டி-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற வரலாற்றால்தான் கட்சியில் அவருக்கு முக்கியத்துவமும், அரசியல் அங்கீகாரமும் கிடைத்தது.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் காலத்தில் டிட்டோஜாக்  போராட்டத்தில் கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தி போராடியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 100% டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற அவர்கள் தகுதி பெற்றிருந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்களால் விருது பெற முடியவில்லை! என்பதை எண்ணி நெஞ்சம் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் இன்னும் காவல்துறையால் திரும்பப் பெறப்படாமல் உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் போராடுகின்ற ஆசிரியர்கள் மீது புதிய புதிய வழக்குகள் எல்லாம்  அதிர்ச்சி அளிக்கிற வகையில் போடப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையினை செயல்படுத்தி காட்டும் வண்ணம் காவல்துறை பொறுப்பு வகிக்கின்ற தாங்கள் உடனடியாக அனைத்து வழக்குகளில் இருந்தும் ஆசிரியர்களை  விடுவித்திட வேண்டுமாறு ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் இதய குமுறலை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

அரசாணை 243 ரத்து செய்யப்பட வேண்டும். அல்லது அதில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும். பழைய ஓய்யூதியத் திட்டத்தை தங்கள் காலத்தில் அமல்படுத்திட வேண்டும். வாக்குறுதி அளித்தபடி இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து அனைத்து நீதிமன்ற தீர்ப்புகளிலும் கூறியுள்ளபடி அமல்படுத்தப்பட வேண்டும்.

விதிகளை மீறி செயல்பட்டு வருகின்ற அனைத்து தணிக்கைத் தடைகளும் உடன் நீக்கம் செய்யப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கையின் மீது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தனிக் கவனம் மேற்கொண்டு தீர்வு காண அறிவுரை வழங்கி உதவிட வேண்டுமாய் தலைவர் கலைஞர், இனமான பேராசிரியர் அவர்களுடைய அன்புப் பார்வையில் வளர்ந்தவன் என்ற முறையிலும், மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுடைய அணுகுமுறையால் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு  கண்டவன் என்ற முறையிலும், ஆசிரியர்கள் நடத்தும் போராட்டம் ஆட்சிக்கு எதிராக நடத்தக்கூடிய போராட்டம் அல்ல; கட்சிக்கு எதிராக நடத்தக்கூடிய போராட்டமும் அல்ல; கோரிக்கைகள் தீர்வு காணப்பட வேண்டும் நினைவுபடுத்த வேண்டும்  என்ற நோக்கத்திலேயே இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. என்பதை மீண்டும் தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் கற்றல்  திறனில் மிகவும் மோசம் என்று பேசியபோது கல்விச் சிறந்த தமிழ்நாடு ஆசிரியர் தின விழாவில் தமிழ்நாட்டு ஆசிரியர்களை குறை கூறும் ஆளுநர் அவர்களே! பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப்பிரதேச கல்வித் தரம் பற்றி பட்டியல் போட்டு விவாதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்!  நீங்களோ அல்லது உங்களின் சார்பில் அனுப்பி வைக்கும் ஒருவரோடு விவாதம் செய்ய தயாராக இருக்கிறார்களா? என்று மீடியாக்களை அழைத்து பேட்டி அளித்தவர்கள் நாம்! என்பதை இவ்விடத்தில் அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர் இயக்கங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற ஒரு பதவியை ஏற்படுத்தி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் சிகரம் சதீஷ் என்பவரை நியமனம் செய்து திருச்சி ஆசிரியர் இல்லத்தில் ஒரு அலுவலகமும் அமைத்து அவரை செயல்பட அனுமதித்துள்ளார். மூன்று ஆண்டு காலம் அவர் பள்ளிக்கு செல்லாமல் மாதாமாதம் ஊதியத்தினை பெற்று வருகிறார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் மனசாட்சியே அவர்தான் என்று பிரகடனப்படுத்தி வருகிறார். மாவட்டம் தோறும்  அலுவலர்களையும், ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை பங்கேற்க செய்து வருகிறார். முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோரை நேரடி  தொடர்பின் மூலம் இயக்கி வருகிறார்.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியின் தோற்றத்தினை பலவீனப்படுத்துவதில் சிகரம் சதீஷ் என்பவர் முதன்மையாக செயல்பட்டு வருகிறார். என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பள்ளிக்கல்வித்துறையின் பெருமையினை பாதுகாத்திட வேண்டுகிறோம்!” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார், ஐபெட்டோ வா.அண்ணாமலை.

–  அங்குசம் செய்திப்பிரிவு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.