பீடி வாங்கித் தரமறுத்த போலீசை கத்தியால் குத்திய விசாரணை கைதிகள் !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெடி மூலப்பொருள் கடத்திய குற்ற வழக்கிற்காக சாத்தூர் சார்பு நீதி மன்றத்தில் விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து குற்றவாளிகளான சிவகாசி பகுதியைச் சேர்ந்த அழகுராஜ் (28), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முண்டுவேலன் பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (25), ஆகிய இருவரையும் பேருந்து மூலமாக காவலர்கள் அழைத்து வந்து நீதிமன்றத்தில் கைதிகள் இருவரையும், ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு இருவரையும், கொண்டு செல்லும் வழியில் இருந்த கடையில் டீ குடித்துள்ளனர்.
அப்போது கைதி அழகுராஜ் காவலர்களிடம் பீடி கேட்டுள்ளார். வாங்கி கொடுக்க காவலர்கள் மறுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அழகுராஜ் டீ கடையில் இருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்க முயற்றுள்ளார். இதில் கைதி கையில் வைத்திருந்த கத்தியால் தன்னை தானே கையில் கிழித்து கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார். அவரை காவலர்கள் ராஜமயில், லட்சுமணன், ஞானகுருசாமி ஆகியோர் சேர்ந்து அழகுராஜை பிடிக்க முயன்ற போது காவலர் ஞானகுருசாமி கையின் மீது கத்தி பட்டு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் காயமடைந்த கைதியையும் காவலரையும் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மேலும், காவலர் ராஜமயில் தங்களை பணி செய்ய விடாமல் தடுத்தது கத்தியால் தாக்கியதாக புகார் அளித்து அழகுராஜ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
— மாரீஸ்வரன்.