“ஹீரோயின்களின் திமிர்த்தனம்” -தில் ராஜா கே.ராஜன் பாய்ச்சல்! திரை விமா்சனம் 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கோல்டன் ஈகிள்’ சார்பில், கோவை பாலசுப்பிரமணியம் தயாரிப்பில்,  இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள படம், “தில் ராஜா”. வருகிற 27-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் செப்டம்பர் 23-ஆம் தேதி நடந்தது.

இதில் பேசியவர்கள்….

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் “படம் முடித்த பின்னர் புரமோசனுக்கு மாஸ் பாடல் ஒன்று கேட்டார்கள். அதில் ஹுயூமராக காமெடியாக இருக்கும்படியான ஆளைத் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் வெங்கடேஷ். விஜய் சத்யா ஒரு நடிகனாக மக்களை மகிழ்விக்கக் கடுமையாக உழைக்கிறார். அவர் பல வலிகளுடன் தான் இங்கு இருக்கிறார். அவருக்கு இந்தப்படம் வெற்றியைத் தரட்டும். இனிமேல் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.  இந்தப்படம் நல்ல இடத்தைச் சென்றடைய  அனைவரும் ஆதரவு தாருங்கள்”.

 

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

நடிகை கனிகா மான்

” இங்கு இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சி.  விஜய் சத்யாவுடன் அடுத்த படத்தில் தான் நடிக்கிறேன்.  ஆனாலும் இந்தப்படம் பார்த்தேன் மிக அருமையாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர் திருமலை “ஒரு நடிகனாக மட்டுமில்லாமல்  தயாரிப்பாளராகவும் இன்று வரை படத்தை சுமந்து கொண்டிருக்கிறார் விஜய் சத்யா. இப்படி ஒரு ஹீரோ இருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமை. தமிழ் சினிமா இப்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. மகாராஜா எவ்வளவு பெரிய ஹிட் எனத் தெரியும். ஆனால், அந்தப்பட  புரொடியூசரே தூக்கமில்லாமல் இருக்கிறார்‌. ஏன்னா அவருக்கு லாபமில்லை. ஷெரீன் இந்தப்படத்திற்கு வந்து கலந்துகொண்டிருக்க வேண்டும். வராமல் இருப்பது கேவலம். இப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் “.

நடிகை வனிதா…

“விஜய் சத்யாவிற்கும்டைரக்டர்  வெங்கடேஷ் சாருக்கும், அம்ரீஷுக்கும் என் வாழ்த்துக்கள்.இந்தப்படத்தில் நடிக்க என்னைத்தேடியபோது, நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள். இதை வெங்கடேஷ் சார் கேட்ட போது, என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம், என்னைக்கு ஷூட்டிங் குன்னு சொல்லுங்கள் நான் வருகிறேன் என போய் நடித்தேன். படம் செய்வதில் உள்ள கஷ்டம் தெரியும். விஜய் சத்யா இந்தப்படத்தை கஷ்டப்பட்டு எடுத்து, இங்கு கொண்டு வந்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் வெங்கடேஷ்

” இப்படத்தில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் தான் ஹீரோயின் கள்‌. ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம், வரவில்லை, சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட உங்கள் பட ஹீரோக்களை கூப்பிடுங்கள் என்றார்கள், நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன் வரவில்லை. இது தான் சினிமா. எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை எதிர் கொள்ளும் ஹீரோ தான் ஒன்லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். சத்யாவின் திறமைக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன். எல்லோரும் ஆதரவு தாருங்கள்”.

 

வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“இந்தப் படத்தின்  நாயகி ரெண்டு பேரும் இங்கே வரவில்லை. என்ன ஒரு திமிர்த்தனம்.இப்படிப்பட்டவர்களை ஏன் படத்தில் நடிக்க வைத்தீர்கள். இனிமேல் அந்த இரண்டு பேருக்கும் தமிழில் யாரும் வாய்ப்பு தரக்கூடாது. இயக்குநர் வெங்கடேஷ் 32 நாட்களில் படத்தை எடுத்து முடித்துள்ளார். பட டிரெய்லரே மிக அருமையாக உள்ளது. தில் ராஜா வெல்லும் ராஜாவாக இருக்கும். ஹீரோ விஜய் சத்யாவின் உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் “.

ஹீரோ விஜய் சத்யா

“எல்லோரும் எங்களை மதித்து என் விழாவிற்கு வந்துள்ளீர்கள், நன்றி. இயக்குநர் வெங்கடேஷ் சார்  சூப்பராக இந்தப்படத்தை இயக்கியுள்ளார். எல்லோரும் ரசித்து ரசித்து வேலை செய்து இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தந்து வெற்றி பெறச்செய்யுமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.

 

பாடல்கள் நெல்லை ஜெயந்தன், கலைக்குமார்.

ஒளிப்பதிவு – மனோ V.நாராயணா

கலை – ஆண்டனி பீட்டர்

நடனம் – செந்தாமரை

எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்

ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல்

புரொடக்ஷன் கண்ட்ரோலர் – பூமதி – அருண்

மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.

தயாரிப்பு  – கோவை பாலசுப்ரமணியம்.

 

—  மதுரை மாறன்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.