சுசீந்திரனிடம் சிக்கிய தயாரிப்பாளர்!- ‘2 கே லவ் ஸ்டோரி ‘ சீக்ரெட்!
‘சிட்டி லைட் பிக்சர்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2K லவ்ஸ்டோரி’. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 04–ஆம் தேதி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மக்கள் நாயகன் ராமராஜன் படக்குழுவினரை வாழ்த்தி, அறிமுக நாயகன் ஜெகவீரை மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்வினில்… இயக்குநர் சுசீந்திரன் பேசியது…
“மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம். வெண்ணிலா கபடிக் குழு படத்தைப்போல் நிறைய பாசிட்டிவ் விசயங்கள் நடந்தது. இயற்கையே நிறையச் செய்து தந்தது. எதேச்சையாக நாயகனை ஒரு ஆபீஸில் சந்தித்தபோது, என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர் ஒரு புராஜக்ட் செய்வதாகச் சொன்னார். சொல்லுங்கள் நாம் ஒரு படம் செய்வோம் என்றேன். அவரும் உடனே சரி என்று வந்தார்.
அவரே அவரது நண்பர்கள் உதவியுடன் புரோடியூஸ் செய்ய வந்தார், ஆனால் நடக்கவில்லை. அப்போது உங்கள் அக்கவுண்டிலிருந்து 10,000 போடுங்கள், நாம் அடுத்த மாதம் படம் செய்யலாம் என்றேன். வெண்ணிலா கபடிக் குழு படம் இப்படித் தான் ஆரம்பமானது. யார் தயாரிப்பாளர் என்று தெரியாமல் தான் அந்தப்படமும் ஆரம்பித்தேன். அதே போல் இந்தப்படமும் தயாரிப்பாளர் தானாக வந்து சேர்ந்தார். படத்தில் பணியாற்றிய பலரும் அது போலவே வந்தார்கள்.
நிறைய புதுமுகத்தை வைத்து எடுத்துள்ளேன். இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு 10 வது படம் இது. அவருக்கு எப்போதும் ஒரு வகையான கிராமத்து முகம் தான் இருக்கிறது. அதை மாற்றி சிட்டி சப்ஜெக்ட், இளமை துள்ளலுடன் செய்யலாம் என கூட்டி வந்துள்ளேன். அட்டகாசமாகப் பாடல்கள் தந்துள்ளார்.
நிறைய ஃபன் இருக்கிற படமாக இப்படம் இருக்கும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு உன்னிடம் கான்ஃபிடண்ட் இல்லை என என் நண்பன் சொல்வான். இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என கான்ஃபிடண்டாக சொல்லிக்கொள்கிறேன். என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவில் எப்படி விஜய் சேதுபதி வந்தாரோ அப்படி ஒரு ஹீரோவாக ஜெகவீர் ஜொலிப்பார். சினிமாவின் மீது பேஷனோடு இருக்கும் இளைஞன்.சூரி, விஷ்ணு போல் இவரும் ஜொலிப்பார்”.
அறிமுக நாயகன் ஜெகவீர்
” ஒருவரை ஜீரோவாக்குவதும் ஹீரோவாக்குவதும் பத்திரிகையாளர்கள் கையில் தான் உள்ளது. இந்தப்படம் எல்லாமே இயற்கை அருளால் தானாக நடந்தது. கன்டன்டாக மிக அருமையாக வந்துள்ளது. சுசி சார் அற்புதமாக எடுத்துள்ளார். ஒரு புராஜக்டில் சரியான லீடர் இருந்தால் போதும், கண்டிப்பாக நல்ல படைப்பு வரும். சுசி சார் சொல்வதை எல்லோரும் சரியாக செய்தால் போதும், அதைச் சரியாகச் செய்துள்ளோம் என நம்புகிறேன். எங்களை நீங்கள் ஆதரித்து வளர துணை புரிவீர்கள் என்று நம்புகிறேன்”.
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன்
“ஜெகவீர் சொன்ன மாதிரி, இந்தப்பட வேலைகள் தானாக நடந்தது. ஹீரோ தான் சுசி சாரை அறிமுகப்படுத்தினார். எப்படி இவர் 2 கே கிட்ஸ் கதை செய்வார் என தயங்கினேன்.ஆனால் கதை சொல்லும் போதே அசத்திவிட்டார். டைட்டிலே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சொன்ன தேதிக்கு முன்னரே படத்தை முடித்துத் தந்துவிட்டார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள்”
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
தொழில் நுட்பக்குழு
இயக்கம் – சுசீந்திரன்
ஒளிப்பதிவு -V.S.ஆனந்த கிருஷ்ணன்
இசை – டி.இமான்
பாடல்கள்: கார்த்திக் நேதா,
எடிட்டர் – தியாகு
கலை – சுரேஷ் பழனிவேலு
நடனம் – ஷோபி, பால்ராஜ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
ஆடை வடிவமைப்பாளர் – மீரா
போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக் ,
தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன்,
தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்
— மதுரை மாறன்.