அங்குசம் சேனலில் இணைய

‘வேட்டையன்’ தியேட்டர்கள் அதிகரிப்பு! லைக்கா செம ஹேப்பி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘வேட்டையன்’ தியேட்டர்கள் அதிகரிப்பு! லைக்கா செம ஹேப்பி ! லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘வேட்டையன்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ள நிலையில், விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அதிக கோரிக்கைகள் எழுந்ததால், இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான மாநிலங்களில் கூடுதல் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

விறுவிறுப்பான கதை சொல்லல், திறமையான நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பு மற்றும் நேர்த்தியான இயக்கம் மூலம் லட்சக்கணக்கானவர்களின் இதயங்களை கைப்பற்றிய வேட்டையன், வெளியானதிலிருந்து அதிகம் பேசப்படும் படமாக மாறியுள்ளது. முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையிலான ரசிகர்களின் தொடர் படையெடுப்பால்
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அதிக திரையரங்குகளை கோரியதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இது குறித்து லைக்கா புரொடக்ஷன்ஸின் செய்தித் தொடர்பாளர்  பேசும் போது “வேட்டையன் மீதான அன்பையும் ஆதரவையும் கண்டு நாங்கள் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் உள்ளோம். அனைவரையும் ஈர்க்கும் சூப்பர் ஸ்டார், த.செ. ஞானவேலின் பிரிலியண்ட் இயக்கம் மற்றும் அனிருத்தின் இசை ஆகியவை ஒன்றிணைந்து மற்ற பிராந்தியங்கள் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக பரவி ஒரு தலைசிறந்த சினிமா அனுபவத்தை உருவாக்கியுள்ளது. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் ” என்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.