‘மிஸ் யூ’ வை ரெட் ஜெயண்ட் ‘கேட்ச்’ பண்ணிய ‘சீக்ரெட்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’  படங்களை  இயக்கிய என். ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன்,  அனுபமா குமார், ரமா, பாலசரவணன்,  ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு இசை ஜிப்ரான்.

‘மிஸ் யூ’ படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது ‌ ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.  இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா  சென்னை சத்யம் திரையரங்கில் நவம்பர் 23- ஆம் தேதி மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் கார்த்தி படத்தின் ட்ரெய்லரை வெளியிட, மிஸ் யூ ஹீரோ சித்தார்த்  பெற்றுக்கொண்டார்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி,

“இந்தப் படத்தின் டைட்டில் ‘மிஸ் யூ’. நம் பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள் தான் ‘லவ் யூ’.. ‘மிஸ் யூ’.. அதுல ரொம்ப கேட்சிங்கான வார்த்தையான  ‘மிஸ் யூ’வை படத்தின் டைட்டிலாக வைத்து விட்டீர்கள். பசங்க சோசியல் மீடியாவில் போடும் போஸ்ட்டுகள் எல்லாமே லவ் போஸ்ட்டுகளாக இருக்கின்றன.. ஆனால் நாம் ஆக்சன் படங்களா எடுத்துக்கிட்ருக்கோம். காதல் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை. பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.. பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்பது அவருக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

படம் ‘மிஸ் யூ’. ஜிப்ரான் இசையில் தினேஷ் நடன வடிவமைப்பில் சித்தார்த் நன்றாகவே ஆடி இருந்தான். பாடல்கள் நன்றாக இருந்தது. பார்ப்பதற்கு நான் படித்த காலத்தில் இருப்பது போன்று சிம்பிளாக இருந்தாலும் உள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. அப்படி இல்லாமல் சித்தார்த் ஒத்துக் கொள்ள மாட்டான்..  இயக்குநருக்கு இது மூன்றாவது படம். பெரிய வெற்றி பெற வேண்டும்.. சித்தார்த் நண்பன் மிலிந்த்துக்காக படம் பண்ணியதாக இருக்கட்டும் ‘சித்தா’ படத்திற்கு அவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டு பண்ணியதாகட்டும்.. அதை புரமோட் செய்த விதமாகட்டும்.. அதற்கு கிடைத்த பாராட்டுக்களை பார்க்கும்போது ரொம்பவே பெருமையாக இருக்கிறது. நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப பேசிக்கொண்டே இருப்பது அவசியமாக இருக்கிறது” என்றார்..

நாயகன் சித்தார்த் பேசும்போது,

“இந்த 2024ல் ஒரு விஷயத்தை வேகமாக பரவ வைக்க வேண்டும் என்றால் நெகட்டிவ்வாக சொன்னால் தான் தீ போல பரவுகிறது.

அடுத்து வரப்போகும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு காதல் என்றால் என்ன, நாம் ரசித்த விஷயங்கள் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளும் விதமாக நாம் காட்ட வேண்டும். இது எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும். ரியாலிட்டி சம்பந்தப்பட்ட விஷயமாகவும் அதே சமயம் சினிமாவுக்கான அழகு இரண்டுமே இதில் இருக்கும். அதனால் தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தைரியமாக வெளியிட இருக்கிறார்கள்.

கார்த்தியை பற்றி இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சர்தார் 2 நைட் ஷூட்டிங் வைத்துக் கொண்டு எனக்காக இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தான். மணி சார் படத்தில் நாங்கள் இருந்த சூட்டிங் பாட்டில் நடந்த விஷயங்களை பற்றி சொன்னவன் ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டான்.

படம் ‘மிஸ் யூ’. அப்போது நான் கார்த்தியிடம் நீயும் என்னை போல ஒரு நடிகனாகத்தானே ஆகப்போகிறாய் என்று கேட்டேன். ஆனால் அதற்கு கார்த்தி நானெல்லாம் உன்னை மாதிரி இல்ல மச்சி, நான் டைரக்ஷனில் தான் போகஸ் ஆக இருக்கிறேன். நான் பண்ணினால் டைரக்சன் தான் என்று சொன்னான். ஆனால் கொஞ்ச நாளிலேயே பருத்தி வீரன் பட அறிவிப்பு வருகிறது. அப்போது நான் போன் பண்ணினால் எடுக்கவே பயந்தான். அதன் பிறகு ஏதோ சொல்லி சமாளித்தான். இந்த நட்பு இப்போது வரை தொடர்கிறது.

நான் சமீப காலத்தில் பார்த்த ரொம்ப ரொம்ப பாசிட்டிவான படம் ‘மெய்யழகன்’. அந்த மாதிரி ஒரு படத்தை ஒப்புக்கொண்டு கமர்சியல் ஹீரோவான கார்த்தி அதில் நடித்து வெளிவந்தது உண்மையிலேயே ஹேட்ஸ் ஆப் கார்த்தி. படம் பார்த்துவிட்டு நீண்ட நேரம் அழுதபடி கார்த்தியிடம் உணர்ச்சிகளை கொட்டினேன். அதை கார்த்தியும் ரொம்பவே ரசித்து கேட்டான்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நண்பர்களுடன் சேர்ந்து பீச்சில் ஜாலியாக ஸ்வீட் காரம் காபி சாப்பிட்டுவிட்டு அந்த இரவு நிம்மதியாக தூங்கினால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அந்த ஒரு உணர்வை இந்த படம் நிச்சயம் உங்களுக்கு கொடுக்கும்” என்றார்.

கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்,

“மிஸ் யூ’ எனது இரண்டாவது படம். இதுபோல இன்னொரு படம் எனக்கு கிடைத்திருக்குமா என்று தெரியாது. இது வழக்கமான ஒரு லவ் ஸ்டோரி அல்ல.  இந்த படத்தில் சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்கு நான் சரியான நியாயம் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.  சுப்புலட்சுமியாக என்னை மாற்ற பயிற்சி அளித்ததற்கும் சுப்புலட்சுமியாக  மாற்றியதற்கும் ரொம்ப நன்றி.ஒரு நடிகையாக எனக்கு அது சவாலாக இருந்தது”  என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது,

“எனக்கு தொடர்ந்து சீரியஸ் கதைகள், சைக்கோ கதைகளாக வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. இயக்குநர் ராஜசேகர் கதை சொல்ல துவங்குவதற்கு முன்பே, லவ் பாடல்கள் இருந்தால் நாம மேற்கொண்டு பேசலாம் என்று சொன்னேன். ஏனென்றால் காதல் பாடல்கள் பண்ணுவதை நான் ரொம்பவே  மிஸ் பண்ண ஆரம்பித்து விட்டேன். ஆனால் இயக்குநர் இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது என்று சொன்னார் பின் அது எட்டு பாடல்களாக மாறிவிட்டது”.

தயாரிப்பாளர் சாமுவேல் மாத்யூ *”இந்தப் படத்தின் மேக்கிங் சமயத்தில் படத்தை பலமுறை பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தன்னம்பிக்கையின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. நாம் நிச்சயமாக ஏதோ ஒரு நல்லதை தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. இந்த படத்தை பார்த்ததும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இதை உடனடியாக வெளியிட முன் வந்ததும் எங்களுக்கு ஏதோ ஒரு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்பட்டது”.

படம் ‘மிஸ் யூ’. இயக்குநர் என். ராஜசேகர் பேசும்போது,” எல்லா காதலுக்கும் நட்பும் குடும்பமும் உதவி செய்வார்களா எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த காதல் கதைக்கு இரு தரப்பிலும் எனக்கு உற்சாகம் கொடுத்தார்கள். இந்த கதையை தயாரிக்கும்சாம், மோனிகா இருவரிடமும் சொன்னபோது மோனிகா கதை ஓகே சொல்ல, உடனடியாக பட்ஜெட் எல்லாம் கணக்கு போட ஆரம்பித்து விட்டார் சாம்.  அப்போதே அவர் இந்த படத்திற்குள் வந்து விட்டார் என புரிந்தது. நான் இதற்கு முன் ஆர்பி.சவுத்ரி சாரிடம் பணியாற்றி இருக்கிறேன்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவர் ஒரு விஷயத்தை எடுத்து விட்டால் அதை அழகாக முடிப்பார். அதே போலத்தான் சாமுவேல் மாத்யூவும். ஒரு விஷயத்தை செய்ய முடியும் என்றால் மட்டுமே அதை ஒப்புக் கொள்வார். இந்த படம் ஆரம்பிப்பதற்கு காரணம் சாமுவேல் மாத்யூ. ஆனால் இந்த படம் நன்றாக வந்துவிடும் என நம்பியவர் சித்தார்த். அவர் எப்போதுமே ஒரு பாசிட்டிவ்வான மனிதர். அவர் உள்ளே வந்த பிறகுதான் எல்லா பாசிட்டிவான விஷயங்களும் நடந்தது.

அவர் சாக்லேட் பாய் மட்டுமே இல்லை. எல்லா கதாபாத்திரங்களையும் சிறப்பாக பண்ணக்கூடியவர். சுருக்கமாகச் சொன்னால் நடிப்பு என்பது நடிப்பதே தெரியாமல் பண்ண வேண்டும் என்பார்கள்.. அது சித்தார்த்திடம் இருக்கிறது. இவர் நல்ல நடிகர் மட்டும் இல்லை. நல்ல பாடகரும் கூட. இந்த படத்தில் ஒரு பாடல் பாடுகிறேன் என்றார். ஆனால் இரண்டு பாடல் பாட வைத்து விட்டோம். அவரு தேதி கிடைத்திருந்தால் மூன்றாவது பாடலையும் பாட வைத்திருப்போம்”என்றார்.

 

— மதுரை மாறன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.