மதுரை – ஆபத்தான முறையில் ஓடையை கடந்து செல்லும் பள்ளி குழந்தைகள் !
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், அய்யாபட்டி ஊராட்சி, வைரவன்பட்டி குடியிருப்பு வாசிகள் மற்றும் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் திருச்சுணைக்கு செல்ல வேண்டும் என்றால், மடணிக்கன்மாய் தண்ணீர் செல்லும் ஓடையை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால், தினமும் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் தினமும் ஆபத்தான முறையில் தண்ணீரில் ஓடையை கடக்கின்றனர்.
இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களில் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் தகவல் கூறப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் கடந்த முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழுவின் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எதுவும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு போர்க்கால அடிப்படையில் பாலம் அமைத்து தருமாறு அய்யாபட்டி ஊராட்சியை கிராம நலசங்கத்தின் சார்பாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.