திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை – செப்பர்டு, நாட்டு நலப்பணி திட்டம் ரெட் ரிப்பன் கிளப் மற்றும்; அய்க்கஃப் சார்பில் மகாத்துமா காந்தி அரசு மருத்துவமணை இரத்த வங்கியுடன் சேர்ந்து மாபெரும் இரத்த தான முகாம் கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின் வழிகாட்டுதலின் படி கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச ஏழை எளிய மக்களின் உயிரை காப்பாற்ற இம்முகாம் உறுதுணையாக இருக்கும் என்று தனது தலைமையுரையில் கூறினார், மற்றும் இயல் அறிவியல் புலத்தலைவர் முனைவர் சார்லஸ் இந்நிகழ்ச்சியில் இரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தொடக்கவுரையாற்றினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி அண்ணல் மகாத்துமா காந்தி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த சேகரிப்பில் ஈடுப்பட்டனர் திருச்சி இரத்த வங்கி ஆற்றுநர் பாலசந்தர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பெஞ்சமின் ஆரோன் டைடஸ் வந்தவர்களை வரவேற்றார் முடிவில் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட அதிகாரிகள், பேராசிரியர்கள் ராஜரத்தினம் எழுஞாயிறு விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசந்திரன், விஜயகுமார் லெனின் ஜெயசீலன், யசோதை அமலேஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்து சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள் அய்க்கஃப் கிளை ஆலோசகர் ஆரோன் ஜோய் எட்வின் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
200க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தன்னார்வத்துடன் வந்து இரத்த தானம் செய்தார்கள். இரத்ததானம் வழங்கிய மாணவ மாணவியருக்கும் மற்றும் ஏற்பாடு செய்த துறைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எச்டிஎப்சி வங்கி சார்பாக அப்துல்லா பரிசு பொருட்களை வழங்கினார். இதன் மூலம் மாணவா்களிடத்தில் உயிா்காக்கும் ரத்ததானம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.