டிசம்பர்-27 ரிலீஸாகும் ‘ராஜா கிளி’ திரைப்படம்
‘மிக மிக அவசரம்’, ‘மாநாடு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
கதை, வசனம், பாடல்கள், இசை நடிகர் தம்பி ராமையா. இவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க, அவரது வெற்றிக் கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீன், முபாஸிர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத மக்கள், வரும் வாரத்தில் மீண்டும் ஒரு மழை எச்சரிக்கை இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘ராஜா கிளி’ ரிலீஸ் தேதியை டிசம்பர் 27 ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ போல ‘சட்டயரிங்’ காக ‘ராஜா கிளி’ இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
— மதுரை மாறன்.