அங்குசம் சேனலில் இணைய

கன்னட ஹீரோ உபேந்திராவின்’Ui’ படத்தின் பிரஸ் மீட் சேதிகள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ & ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ சார்பில் ஜி.மனோகரன் & கே.பி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில். நடிகர் உபேந்திரா  இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை மறுநாள் ( டிசம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வில்  பேசியவர்கள்..இணைத்தயாரிப்பாளர் நவீன் “இந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய கனவு. உபேந்திரா சார் இதை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கதையை எந்த ஜானரிலும் அடைக்க முடியாது. தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணி புரிந்துள்ளனர்” என்றார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தயாரிப்பாளர் சமீர் “ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும். அதில் உபேந்திராவும் ஒருவர். டிரெய்லர் அருமையாக வந்துள்ளது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

கவிஞர் மதன் கார்க்கிகவிஞர் மதன் கார்க்கி, “தனித்துவமான கதைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர்கள் குறைவு. எந்த விஷயம் எடுத்தாலும் அதை மட்டும் தனித்துவமாக காட்டுவதில் மெனக்கெடுவார். இந்தப் படத்திலும் அந்த வித்தியாசமான கதைக்களம் இருக்கும். அவருக்கும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நடிகர் சண்முகப்பாண்டியன்(   விஜயகாந்த் மகன்) “உபேந்திரா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அப்பாவும் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். ‘Ui’ படத்தின் டிரெய்லரும் வித்தியாசமாக உள்ளது. ஹாலிவுட் தரத்தில் நம்மால் படம் எடுக்க முடியாதா அவர்கள் செய்வதை நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும். அந்த ஏக்கத்தை இந்தப் படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை கன்னடப் படம் என்று மட்டும் பார்க்காமல் பான் இந்திய படமாகப் பார்த்து மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்”.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

உபேந்திரா & ரேஷ்மா
உபேந்திரா & ரேஷ்மா

ஹீரோயின் ரேஷ்மா, “முதல் முறையாக சென்னைக்கு என் படத்தின் புரமோஷனுக்காக வந்திருப்பது மகிழ்ச்சி. என் கதாபாத்திரம் பற்றியும் படம் பற்றியும் பெரிதாக நான் பேச முடியாது. ஆனால், படம் நிச்சயம் உங்களுக்கு பல ஆச்சரியங்களைக் கொடுக்கும்”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடிகர் உபேந்திரா, “டிரெய்லரில் நிறைய வித்தியாசமான விஷயங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தப் படம் ஒரு ஃப்ரூட் சாலட் போல! இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கும். கமர்ஷியல் படத்திற்கு ஏற்ற எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது. இன்னொரு சர்ப்ரைஸான விஷயமும் இதில் இருக்கு . அதை நீங்கள் படம் பார்த்துவிட்டு என்னிடம் சொல்ல வேண்டும் என காத்திருக்கிறேன். என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி”.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.